நிலக்கடலையில் விதை மேலாண்மை முறை
Page 1 of 1
நிலக்கடலையில் விதை மேலாண்மை முறை
மணிலா சாகுபடி (நிலக்கடலை)
செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற விதை மேலாண்மை முறைகளைப்
கடைப்பிடிக்க வேண்டும். அதிக மகசூல் பெற சரியான பருவத்தில் விதைகளை
விதைப்பது மிகச் சிறந்ததாகும்.
பூச்சி நோய்த் தாக்குதலைத் தவிர்க்க, வறட்சியைத் தவிர்க்க, அதிக மழையால்
பயிர் பாதிக்காமல் இருக்க, பூக்காமல் இருப்பதை தவிர்க்க, அறுவடை சமயத்தில்
மகசூல் அதிகரிக்க தகுந்த பருவம் மிக அவசியம் ஆகும்.
விதை முளை கட்டுதல்:
தேவையான பொருள்கள்:
செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற விதை மேலாண்மை முறைகளைப்
கடைப்பிடிக்க வேண்டும். அதிக மகசூல் பெற சரியான பருவத்தில் விதைகளை
விதைப்பது மிகச் சிறந்ததாகும்.
பூச்சி நோய்த் தாக்குதலைத் தவிர்க்க, வறட்சியைத் தவிர்க்க, அதிக மழையால்
பயிர் பாதிக்காமல் இருக்க, பூக்காமல் இருப்பதை தவிர்க்க, அறுவடை சமயத்தில்
மகசூல் அதிகரிக்க தகுந்த பருவம் மிக அவசியம் ஆகும்.
- நல்ல வளமான செம்மண் பாங்கான காற்றோட்டமும், நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.
- போரான் மற்றும் கால்சியம் (சுண்ணாம்பு சத்துகள்) குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
- வேளாண் உற்பத்தியில் அதிக மகசூலை அதிகரிக்க குறைந்த வயதுடைய உயர்
விளைச்சல் ரகங்களைத் தேர்வு செய்து தரமான விதைகளைப் பயன்படுத்துவது
முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். - அதிக இனத்தூய்மையும், கல், மண் தூசி, பதர் போன்றவை நீக்கப்பட்டு அதிக
புறத் தூய்மையும், பூச்சி நோய் தாக்காமலும், நல்ல முளைப்புத் திறனுடன்
கூடிய வேகமான வளர்ச்சியை தர வல்ல விதைகளே தரமான விதைகள் ஆகும். - 18.64 அளவுள்ள (7.2 மீ.மீ. வட்டமுள்ள) வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து
நல்ல பருமனுள்ள நோய் தாக்காத விதைகளையே விதைப்புக்காக பயன்படுத்த
வேண்டும். ÷உடைந்து போன சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய
விதைகளை நீக்கவிட வேண்டும்.
விதை முளை கட்டுதல்:
- எந்தப் பயிரிலும் சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தால்தான் அதிக
மகசூல் பெற முடியும். எனவே விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கவும், அவை
விரைவில் முளைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பெற விதைகளை முளைகட்டி
விதைத்தல் ஒரு எளிய முறையாகும்.
தேவையான பொருள்கள்:
- தரம் பிரித்த நல்ல விதை 55 கிலோ (ஒரு ஏக்கருக்கு), கால்சியம் குளோரைடு
140 கிராம், 28 லிட்டர் தண்ணீர் அதாவது விதையின் பாதியளவு தண்ணீர்,
கோணிப்பைகள் 2 கிலோ, விதைக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடு அதாவது
தீப்பெட்டி உள்அறை அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். - அதே போல் 28 லிட்டர் கரைசல் (2 குடம் அளவு) தயாரித்து கொள்ள வேண்டும்.
- இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலில் விதையை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- இக்கரைசலில் ஊற வைத்த விதைகளை ஈரச்சாக்கின் மீது பரப்ப வேண்டும்.
- அதை மற்றொரு ஈரச்சாக்கு கொண்டு 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். இதற்கு பின் விதையில் கருமுளை வெளிவந்திருக்கும்.
- இவ்வாறு முளை கண்ட விதைகளைப் பிரித்து எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
- மீதமுள்ள விதைகளை ஈரச்சாக்கால் மறுபடியும் மூடி 2 மணி நேரம் கழித்து கருமுளை வந்த விதைகளை சேகரிக்க வேண்டும்.
- முளை கட்டிய விதைகளை நிழலில் நன்கு உலர்த்தி விதைப்புக்கு பயன்படுத்தலாம். இல்லையென்றால் அவ்விதையால் மற்ற விதை நேர்த்தி செய்யலாம்.
- மிக நீளமான கருமுளை வெளிவந்த விதைகளையும் இறந்த விதைகளையும் தனியேப் பிரித்து எடுத்து விட வேண்டும்.
- இவ்வாறு நல்ல தரமான முளைப்புத் திறனுடைய விதைகளைத் தேர்வு செய்து விதைப்புக்கு பயன்படுத்துதல் நன்மை தரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நிலக்கடலையில் விதை மேலாண்மை முறை
» நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
» நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
» இயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி
» களை மேலாண்மை
» நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
» நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
» இயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி
» களை மேலாண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum