தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளையராஜாவின் மெலோடியில் பாதியாவது நான் கொடுப்பேன்! - அச்சு

Go down

இளையராஜாவின் மெலோடியில் பாதியாவது நான் கொடுப்பேன்! - அச்சு Empty இளையராஜாவின் மெலோடியில் பாதியாவது நான் கொடுப்பேன்! - அச்சு

Post  ishwarya Tue Mar 19, 2013 5:45 pm

மயூரி சேகர் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் நாராயன் நாகேந்திரராவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அச்சு, மூன்றாவது தலைமுறை இசையமைப்பாளராவார். இவருடைய அப்பா பிரபல மலையாள திரையுலக இசையமைப்பாளரான ராஜாமணி ஆவார். சுமார் 700 படங்களுக்கு மேல் பின்னணி இசையமைப்பு செய்திருக்கும் ராஜாமணி, தமிழில் 'வானமே எல்லை', 'வாஞ்சிநாதன்', 'எல்லாம் அவன் செயல்' உள்ளிட்ட பல படங்களுக்கு பின்னணி இசைக் கோர்ப்பு செய்திருக்கிறார். அச்சுவின் அப்பா ராஜாமணி மட்டும் இன்றி அவருடைய தாத்தா, பி.ஏ.சிதம்பரநாதனும் பிரபல இசையமைப்பாளராவார். இவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் பழம்பெரும் இசையமைப்பாளரான கே.வி.மகாதேவன். இப்படி மூன்றாவது தலைமுறை இசையமைப்பாளராக உருவாகியிருக்கும் அச்சு, ஏற்கனவே தெலுங்கு நடிகர் மோகன்பாபு தயாரிப்பில் அவருடைய மகன் மனோஜ் ஹீரோவாக நடித்த 'நேனு மீக்கு தெலுசா' என்ற படத்திற்கு இசையத்திருக்கிறார். இப்படம் தான் தமிழில் 'என்னைத் தெரியுமா' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. 'பொல்லாதவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'குர்ராடு' படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருக்கிறார். இத்துடன் மேஜர் ரவி இயக்கிய மலையாளப் படம் 'குருஷேத்ரா'வுக்கும் இவர்தான் இசையமைத்திருக்கிறார்.

தற்போது தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் அச்சு, தனது 7 வயதிலேயே இசையில் ஃபர்ஸ்ட் கிரேடு முடித்தாராம். 27 வயதில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஏழாவது கிரேடு வரை முடித்திருக்கிறார். இன்னமும் தனது தாத்தா பி.ஏ.சிதம்பரநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களிடம் கர்நாடக சங்கீதம் பயின்று வரும் அச்சு, தனது முதல் தமிழ்ப் படமான 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' படத்தில் முழுக்க முழுக்க மொலோடி பாடல்களை கொடுத்து அசத்தியிருக்கிறாராம். என்ன மொலோடிதான் உங்க ஸ்டைலா? என்று கேட்டதற்கு, "இளையராஜா சாரோட மொலோடி பாடலை என்னால் பீட் பண்ண முடியாது. அதனால்தான் நான் வேறுபட்ட சப்தங்களின் மூலம் என்னை நிலைநாட்டிக்கொண்டேன்." என்று ரஹ்மான் சாரே சொல்லியிருக்கிறார். நான் இளையராஜா சார் போல மெலோடிகளை கொடுக்கமுடியாது என்றாலும், அவருடைய பாதியாவது என்னால் கொடுக்க முடியும் அதேபோல, ராஜாசாரோட மொலொடி மற்றும் ரஹ்மான் சாரோட சவுண்ட்ஸ் இவை இரண்டையும் எனது பாணியாக கொண்டு நான் இசைத்துறையில் சாதிப்பேன். 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' கதைக்கு தேவைப்பட்டதால் மெலோடி பாடல்களை கொடுத்திருக்கிறேன். எனது அடுத்த அடுத்த படங்களில் என்னுடைய வேறுபட்ட இசையை கேட்பீர்கள்." என்றார். அச்சுவின் முதல் தமிழ்ப் படமான 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' படத்தின் இசை வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்குள்ளே அச்சுவுக்கு ஏ.வெங்கடேஷ் இயக்கும் புதிய படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இசையால மயக்கிட மாட்டீங்க.....?


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum