பெப்சி சம்பள பிரச்சினைக்கு பிப். 16-ல் முடிவு தெரியும்?!
Page 1 of 1
பெப்சி சம்பள பிரச்சினைக்கு பிப். 16-ல் முடிவு தெரியும்?!
தமிழ் திரையுலக தொழிலாளர்களின் அமைப்பான பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சினை முடிவு எட்டப்படாமல் நீடித்துக் கொண்டே செல்கிறது. தமிழக அரசு இதில் தலையிட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வரும் பெப்சி தொழிலாளர்களிடம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான சம்பள உயர்வை நிர்ணயம் செய்வதில் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. நீடித்துக்கொண்டே போன இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையம் அதிகாரிகள் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசினார்கள். இரண்டு கட்ட பேச்சு வார்த்தையாக நடைபெற்றபோதிலும் இந்த பிரச்சினைக்கு முடிவு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து பெப்சியின் பொதுக்குழு கூடியது. அதில் புதிய சம்பளம் பற்றி ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இதேபோல தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவும் நேற்று (பிப்.13) கூட்டப்பட்டது. அதிலும் சம்பளம் பற்றி ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தயாரிப்பாளளும், பெப்சி நிர்வாகிகளும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள். தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் நடைபெற இருக்கும் இந்த பேச்சு வார்த்தை வரும் பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பிரச்சினைக்கான இறுதிகட்ட பேச்சு வார்த்தையாக இது இருக்கும் என்றும், இதில் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிலிம்சேம்பர் முடிவு தொழிலாளர்களை கட்டுப்படுத்தாது! – பெப்சி
» பிப்.,23ல் தியேட்டர்கள் மூடல்: தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
» ரெயில்வே தொழிற்சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: மாலையில் முடிவு தெரியும்
» லட்டுவால் சம்பள உயர்வு!
» மாதவிலக்குப் பிரச்சினைக்கு...
» பிப்.,23ல் தியேட்டர்கள் மூடல்: தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
» ரெயில்வே தொழிற்சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: மாலையில் முடிவு தெரியும்
» லட்டுவால் சம்பள உயர்வு!
» மாதவிலக்குப் பிரச்சினைக்கு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum