நான் விருதுகளுக்குத் தகுதியானவனா என்று எனக்கு தெரியாது: விஜய்
Page 1 of 1
நான் விருதுகளுக்குத் தகுதியானவனா என்று எனக்கு தெரியாது: விஜய்
கோடம்பாக்கத்தில் விருது விழாக்களுக்கு பஞ்சமே இருக்காது. விஜய்யின் பி.ஆர்.ஓவான பி.டி. செல்வகுமார் பிலிம் டுடே என்ற சினிமா பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகையின் சார்பில் 'பிலிம் டுடே' விருது என்ற விருதை வழங்கி வந்தார். தற்போது ஒரு சினிமா இணையதளம் நடைத்திவரும் செல்வகுமார், திரைப்படக் கேமராவைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பெயரால் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
5-வது ஆண்டாக எடிசன் விருது 2012 வழங்கும் விழா சென்னையில் லேடி ஆண்டாள் பள்ளி வளாக அரங்கத்தில் நடந்தது. விஜய், ஜெயம் ரவி, சிம்பு, லட்சுமி ராய், ரிச்சா, இனியா, சுஜா வாருனீ போன்ற முன்னணி நட்சத்திரங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சி அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு நல் விருந்தாக அமைந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக எடிசன் விருது 2012 இன் முதல் விருதாக சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவர் Best Dubbing Artist விருது சவீதா ரெட்டிக்குச் சென்றது. இந்த விருதை வசுந்த்ரா வழங்கினார். தொடர்ந்து சிறந்த பத்திரிகையாளர் விருது தி ஹிந்து நாளிதழில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர் அசோக் குமாருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருதினை இளையதளபதி விஜய் 'வேலாயுதம்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காகத் தட்டிச் சென்றார். அவருக்கு 2012 ஆம் ஆண்டிற்கான சூப்பர் ஸ்டார் ரஜினி விருதும் வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய், "விருதுகளுக்குத் தகுதியானவனா என்று எனக்குத் தெரியாது...அதே நேரம் இந்த மாதிரி விருதுகள் கலைஞர்களுக்கு ஒரு டானிக் போன்றவை...இன்னும் அதிகமாகச் சாதிக்க சக்தியும் ஊக்கமும் அளிப்பவை... சாதரணமாக இரண்டு மூன்று பேர் சேர்ந்து விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்...ஆனால் உலகம் முழுவதும் இருக்கும் திரைப்பட ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் எடிசன் விருது சிறப்பானதாக இருக்கிறது... உலகத்தில் எது இல்லாமல் வேண்டுமானாலும் இருந்து விடலாம் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது...அந்தப் படத்திற்கு பெருத்தவரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி...அதில் வருவது போலவே எல்லாமே நல்லதாக இருக்கட்டும் ஆல் இஸ் வெல்..." என்று கூற அரங்கில் அமர்ந்திருந்த அத்துனை ரசிகர்களும் ஆல் இஸ் வெல் என்று ஒரு மித்த குரலில் கூற அரங்கில் ஒரு நல்ல அதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது.
ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக 'நண்பன்' படத்தில் வரும் 'என் நண்பன் போல யாரு மச்சான்' என்கிற பாடலைப் பலத்த கரவொலிகளுக்கிடையே பாடினார் விஜய். மேலும் எடிசன் விருதுகள் பெற்ற சக நடிகர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்
சிறந்த ரொமாண்டிக் ஹீரோ விருது ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது. வெட்கத்துடனேயே அதனை விஜய் கைகளால் பெற்றுக் கொண்ட ஜெயம் ரவி, "சூப்பர் ஸ்டார் ரஜினி விருது விஜய்க்கு வழங்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி... இன்னும் சில வருடங்கள் கழித்து விஜய் பெயராலும் விருதுகள் வழங்கப்பட வேண்டும்..அந்த அளவிற்கு மிகவும் சிறந்த நடிகர் விஜய்" என்று பேசினார்.
சிறந்த நடிகை விருது 'மயக்கம் என்ன' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரிச்சா கங்கோபாத்யாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக நடிகை விருது 'வாகை சூட வா'வில் சிறப்பாக நடித்தமைகாக இனியாவுக்குச் சென்றது.
கனவுப்பெண் விருது லட்சுமிராய்க்கு வழங்கப்பட்டது. அவருக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.
இனியா, ரிச்சா, லட்சுமி ராய் ஆகிய மூன்று தேவதைகளும் சேர்ந்து ஒரு குட்டித்தேவதைக்கு விருது வழங்கினர். ரிச்சா கிரீடம் அணிவிக்க லட்சுமி ராய் விருது வழங்க இனியா பூக்கள் செரிய சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினைப் பெற்றுக் கொண்டாள் 'தெய்வத்திருமகள்' சாரா. விக்ரமைப்போல நடிக்குமாறு சாராவை கேட்க, "விக்ரம் அங்கிள் மிகத்திறமையான நடிகர்.. அவரை இமிடேட் செய்வது என்னால் முடியாது... கொஞ்சம் முயற்சி செய்கிறேன்" என்று கூறிய சாரா, 'கிருஷ்ணா வந்தாச்சு...' என்ற டயலாக்கைப் பேசிக்காட்டினார்.
எடிசன் விருது 2012 இன் சிறப்பம்சமாக பிரபலப் பின்னணிப் பாடகியும் சமீபத்தில் வெளிவந்த 'ஒஸ்தி' திரைப்படத்தில் 'கலசலா கலசலா...' என்கிற பாடலைப் பாடியவருமான எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தனக்கு ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட எல்.ஆர்.ஈஸ்வரி அந்தப் பாடலையும் பாடினார்.
சிறந்த பாடகியாக சின்மயி, பாடகராக ஆலாப் ராஜுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த பாடலாக 'கொலவெறி' தேர்ந்தெடுக்கப்பட்டு தனுஷ் சார்பாக அதற்கான விருதினை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளர் விருது ஹாரிஸூக்கும், சிறந்த அறிமுக இசையமைப்பாளர் விருது 'எங்கேயும் எப்போதும்' சத்யாவிற்கும் வழங்கப்பட்டது.
அசாதாரணத் திறமையாளர் விருது வழங்கப்பட்ட லாரன்ஸ் ராகவேந்திரா மேடையில் ஆடும் பொருட்டு இசை ஒலிக்கத் தாமதமாக ரசிகர்களின் கைதட்டல்கலுக்கேற்ப மிகவும் நளினமாக ஆடினார்.
விழாவில் இந்தியக்கலைஞர்களுக்கு மட்டுமல்லாது, மலேசிய நாட்டைச்சேர்ந்த துளசிமாறனுக்கு கடல்கடந்த சிறந்த தயாரிப்பாளர் விருது அவரது குருசாமி படத்திற்காக வழங்கப்பட்டது. சிறந்த தொலைக்காட்சித் தொடராக ஆஸ்ட்ரோ டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'என்ன பிழை செய்தேனுக்காக' மகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மலேசியத்தமிழ்ப் பாடகர்கள் லோகேஸ்வரன் மற்றும் தாட்சாயிணி பாடல்களைப் பாடி ஆடிய விதம் ரசிகர்களுக்கு பெருத்த உற்சாகத்தை அளித்தது.
சென்னையைச் சேர்ந்த நடனக்கலைஞர்களும் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். நிகழ்ச்சியை சிட்டி பாபுவும் நடிகர் பாண்டுவின் மகன் பிண்டோவும் தொகுத்து வழங்கினர்.
வழங்கப்பட்ட விருதுகளின் விபரம்:
சிறந்த நடிகர்: விஜய், நடிகை: ரிச்சா கங்கோபாத்யா
சிறந்த அறிமுக நடிகர்: மகத், நடிகை: இனியா
சிறந்த ரொமண்டிக் ஹீரோ: ஜெயம் ரவி
சிறந்த துணை நடிகர்: ஸ்ரீமன், ஜெயப்பிரகாஷ் - நடிகை: லட்சுமி ராமகிருஷ்ணன்
சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ்
சிறந்த அறிமுக இசையமைப்பாளர்: சத்யா
சிறந்த பின்னணிப்பாடகர்: ஆலாப் ராஜு
சிறந்த பின்னணிப்பாடகி: சின்மயி
சிறந்த நகைச்சுவை நடிகர்: பிரேம்ஜி
சிறந்த நகைச்சுவை நடிகை: கோவை சரளா
சிறந்த டப்பிங் இன்சார்ஜ்: நெல்லை சாலமன்
சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்: சவீதா ரெட்டி
சிறந்த ஒப்பனை: தாஸ்
சிறந்த ஆர்ட் டைரக்ஷன்: முத்துராஜ்
சிறந்த எடிட்டிங்: கோலா பாஸ்கர்
சிறந்த ஒளிப்பதிவு: ராம்ஜி
Enigmatic director: மிஷ்கின்
சிறந்த அறிமுக இயக்கம்: சரவணன்
சிறந்த திரைக்கதை: சாந்தகுமார்
சிறந்த EFX: Prism புருஷோத்தமன்
சிறந்த விழிப்புணர்ச்சி படம்: 'வெங்காயம்' இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்
சிறந்த பத்திரிகையாளர் விருது: அசோக் குமார் (தி ஹிந்து)
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வரலட்சுமி யாரென்றே எனக்கு தெரியாது என்று என்னால் மறுக்க முடியாது: விஷால்
» “எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?
» தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்
» தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்
» எனக்கு கிரிக்கட் பற்றி ஏதும் தெரியாது காசுபற்றித்தான் தெரியும் என்கிறா அம்மா!
» “எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?
» தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்
» தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்
» எனக்கு கிரிக்கட் பற்றி ஏதும் தெரியாது காசுபற்றித்தான் தெரியும் என்கிறா அம்மா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum