தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காலர் இல்லாத சட்டையால் கார்த்திக்கு நேர்ந்த அவமானம்!

Go down

 காலர் இல்லாத சட்டையால் கார்த்திக்கு நேர்ந்த அவமானம்! Empty காலர் இல்லாத சட்டையால் கார்த்திக்கு நேர்ந்த அவமானம்!

Post  ishwarya Tue Mar 19, 2013 4:15 pm

சமீபத்தில் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப்பில் சென்னை-திருவள்ளூர்-காஞ்சிபுரம் வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் புதிய சங்கம் உருவான போது விழாவின் சீஃப் கெஸ்ட் கார்த்தி சிவக்குமாரையும், கமலா திரையரங்க உரிமையாளர் வி.என்.சிதம்பரத்தையும் கிளப் ஊழியர்கள் காலர் இல்லாத சட்டை அணிந்து வந்ததால் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வந்தன அல்லவா..?! அதனால்., அந்த கிளப்பின் மெம்பரும் இவ்விழாவினை அங்கு ஏற்பாடு செய்திருந்த புதிய சங்கத் தலைவரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஆர்.பன்னீர் செல்வத்தை தங்களது கிளப்பை விட்டு நீக்க முடிவு செய்து விட்டதாம் ஜிம்கானா கிளப் நிர்வாகம். இது கேள்விப்பட்டதும் பாரம்பரியம் மிக்க அந்த கிளப்பில் இருந்து விலகப்படுவதை விரும்பாத பன்னீர்செல்வம் தங்களது திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் லெட்டர் பேடில் ஜிம்கானா கிளப்பின் மீது எந்த தவறும் இல்லை.... நாங்கள் அந்த கிளப்பை புக் செய்தபோதே டிரஸ் கோடு உண்டு என்பதை அவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால் விழாவிற்கு வந்த நடிகர் கார்த்தி உள்ளிட்டவர்களிடம் நாங்கள் தெரிவிக்க மறந்ததே தவறுக்கு காரணம், கிளப் ஊழியர்கள் யாரும் தவறாக நடக்கவில்லை என ஒரு கடிதத்தை சங்கத்தின் தலைவர், இணைச்செயலாளர் உள்ளிட்டவர்களின் கையெழுத்துடன் ரெடி செய்து ஜிம்கானா கிளப்பிற்கு அனுப்பியதுடன் அதன் நகலை மீடியாக்களுக்கு அனுப்பி வைத்து பிரயாசித்தம் தேடிக் கொண்டிருக்கிறார்! பாவம்! தவற உணர்ந்திட்டாருல்ல.. போனாப்போகுதுனு விட்ருங்கப்பா.......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum