தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டான்ஸ் ஆட தெரியலைனா கவலைப்படாதீங்க..! - சூர்யா

Go down

டான்ஸ் ஆட தெரியலைனா கவலைப்படாதீங்க..! - சூர்யா Empty டான்ஸ் ஆட தெரியலைனா கவலைப்படாதீங்க..! - சூர்யா

Post  ishwarya Tue Mar 19, 2013 3:59 pm

நடனம் ஆட தெரியவில்லை என்பதற்காக புது கதாநாயகர்கள் பயப்பட தேவையில்லை என்று நடிகர் சூர்யா கூறினார். பட அதிபர் உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ராஜேஷ் எம். டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல் மற்றும் டிரைலரை நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் வெளியிட்டனர். விழாவில், நடிகர் சூர்யா பேசியதாவது:- உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவம் உள்ளவர் போல் நடித்து இருக்கிறார். அவருக்கு நடனம் ஆட வரவில்லை என்று இங்கே சொன்னார். புது கதாநாயகர்கள் நடனம் ஆட வரவில்லை என்பதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்தபோது எனக்கும் நடனம் ஆட வரவில்லை. சண்டை போட தெரியவில்லை. 'பரவால்லயே பழசெல்லாம் மறக்காம ஒத்துக்கிறாரே..) அதன்பிறகு படிப்படியாக திறமையை வளர்த்துக் கொண்டேன். திறமையை வளர்த்துக் கொண்டால், முன்னுக்கு வரலாம். எல்லா துறைகளிலுமே கஷ்டப்பட்டால்தான் முன்னுக்கு வர முடியும். நானும் கஷ்டப்பட்டுதான் முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் என பலரும் காரணமாக இருக்கிறார்கள். இவ்வாறு சூர்யா பேசினார். விழாவில் நடிகர்கள் 'ஜெயம்' ரவி, சிபிராஜ், விஷ்ணு, சந்தானம், நடிகைகள் ஹன்சிகா, சரண்யா பொன்வண்ணன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், தரணி, பேரரசு, மிஷ்கின், வெற்றி மாறன், ராதா மோகன், கண்ணன், சீனுராமசாமி, அமுதன், எல்ரெட் குமார், பட அதிபர்கள் துரை தயாநிதி, செண்பகமூர்த்தி, அர்ஜுன் துரை மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். டைரக்டர் ராஜேஷ் எம். வரவேற்று பேசினார். உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறினார். ஏன் சார்... டியூசன் ஏதும் சொல்லிக் கொடுக்கப் போறீங்களா....?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum