மீண்டும் 'ஆரண்ய காண்டம்'?
Page 1 of 1
மீண்டும் 'ஆரண்ய காண்டம்'?
இந்திய அரசு 2011-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை அறிவித்து இருக்கிறது. இம்முறை 'அழகர்சாமியின் குதிரை', 'ஆரண்ய காண்டம்', 'வாகை சூட வா' ஆகிய மூன்று படங்களும் தேசிய விருதுகள் வென்று இருக்கிறது. 'ஆரண்ய காண்டம்' சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநர் என இரண்டு தேசிய விருதுகளை வென்று இருக்கிறது. தேசிய விருது வென்றிருக்கும் 'ஆரண்ய காண்டம்' படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிடம் பேசியபோது.. "தேசிய விருது வென்றிருப்பது குறித்து மிகப்பெரிய சந்தோஷம் எல்லாம் இல்லை. 'ஆரண்ய காண்டம்' படத்திற்கு யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் வினோத், ஜமீன்தாராக நடித்த சோமசுந்தரம் ஆகிய மூன்று பேருக்கும் விருது கிடைக்கும் என்று தான் எதிர்பார்த்தேன். எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தேசிய விருது தேர்வு செய்த JURY-களை மிகவும் பாராட்டுகிறேன். 'ஆரண்ய காண்டம்' DARK THEME உள்ள படம். இதுவரை தேசிய விருது வென்ற படங்களைப் பார்த்தால் அனைத்துமே எதார்த்தமான படங்களாக இருக்கும். ஆனால் 'ஆரண்ய காண்டம்' அப்படிப்பட்ட படம் அல்ல. இப்படத்தினை தேர்வு செய்தது அவர்களது முற்போக்குத்தன்மையை காட்டுகிறது. தேசிய விருதுகளை வென்றது மட்டுமல்லாமல் TWITTER இணையத்தில் TRENDING எனது படம் வந்தது மிகவும் மகிழ்ச்சி. நிறைய பேர் எனக்கு போன் செய்து இதுகுறித்து வாழ்த்து தெரிவித்தார்கள். எனது வேலையை நான் சரியாக பார்த்தேன் என்பதில் எனக்கு திருப்தி. அனைவருமே அவர்களது வேலையை சரியாக பார்த்தால் கண்டிப்பாக ஒரு நாள் அதற்கான பலன் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. அது 'ஆரண்ய காண்டம்' படத்திற்கான தேசிய விருது மூலம் எனக்கு கிடைத்து இருக்கிறது" என்று தெரிவித்தார். படத்தின் எடிட்டர் ப்ரவீனிடம் பேசிய போது "மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 'ஆரண்ய காண்டம்' வித்தியாசமான படம். அதற்கான எடிட்டிங்கில் நானும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இருவருமே இணைந்து நிறைய விஷயங்களை மேற்கொண்டோம். 'ஆரண்ய காண்டம்' படம் மூன்று நபர்களின் கதை ஒரே கோணத்தில் முடியும். நீங்கள் படம் பார்க்கும் போது எந்த நேரத்தில் கட் செய்வார்கள் என்று நினைப்பீர்களோ, அதற்கு அடுத்த ஷாட்டில் தான் கட் செய்து இருப்போம். படம் கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சிகளில் கட்டிங் வேகமாக இருக்கும். இதற்கு காரணம் எல்லாமே நாங்கள் இருவரும் பேசி வேறு மாதிரி புதுமையாக செய்யலாம் என்று முடிவெடுத்தது தான்" என்றார். விருது பெற்ற பின்பு 'ஆரண்ய காண்டத்தை' மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா. படம் கமர்ஷியலா வெற்றி பெறாதததால் மக்களிடம் நல்லா ரீச் ஆகலை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தார் இயக்குநர். நல்ல முடிவு! வாழ்த்துகள்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரண்ய காண்டம் யுஎஸ்ஏவில் மறுவெளியீடு
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!
» மீண்டும் உடல்நிலை பாதிப்பு – மீண்டும் மருத்துவமனையில் ரஜினி!
» ‘ஆபாச காட்சி, அறுவறுப்பான வசனங்கள்…’: 52 வெட்டுக்களுடன் ஆரண்ய காண்டத்துக்கு அனுமதி!
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!
» மீண்டும் உடல்நிலை பாதிப்பு – மீண்டும் மருத்துவமனையில் ரஜினி!
» ‘ஆபாச காட்சி, அறுவறுப்பான வசனங்கள்…’: 52 வெட்டுக்களுடன் ஆரண்ய காண்டத்துக்கு அனுமதி!
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum