தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமாவில் தொடரும் திருமதி. ரீமா சென்!

Go down

சினிமாவில் தொடரும் திருமதி. ரீமா சென்! Empty சினிமாவில் தொடரும் திருமதி. ரீமா சென்!

Post  ishwarya Tue Mar 19, 2013 2:01 pm

திருமணம் முடிந்த கையோடு நடிப்பிற்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்திருக்கிறார் நடிகை ரீமா சென். 'மின்னலே' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரீமா. தொடர்ந்து 'தூள்', 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் டெல்லியை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரன் சிங் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரது வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதம் சொல்ல திருமணமும் முடிவாகி, டெல்லியில் நேற்று திருமணமும் நடந்து முடிந்தது. பஞ்சாப் பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், முக்கிய திரைநட்சத்திரங்கள் சிலரும் கலந்து கொண்டனர். பொதுவாக திருமணம் முடிந்த கையோடு நடிகைகள் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுவர். ஆனால் ரீமா சென் தொடர்ந்து நடிக்க போவதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். விரைவில் இப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுதவிர இரண்டு-மூன்று படங்களுக்கு கதை விவாதம் நடந்து வருகிறது என்றார். மேலும் திருமணம் உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரீமா, நிச்சயமாக கிடையாது. எப்பவும் போல சினிமாவில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். அட்டகாசமான குடும்ப குத்துவிளக்கு!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum