தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீம்பு பிடித்துதான் சினிமா துறைக்கு வந்தேன்: ஜெயம் ராஜா

Go down

வீம்பு பிடித்துதான் சினிமா துறைக்கு வந்தேன்: ஜெயம் ராஜா  Empty வீம்பு பிடித்துதான் சினிமா துறைக்கு வந்தேன்: ஜெயம் ராஜா

Post  ishwarya Tue Mar 19, 2013 1:49 pm

சென்னையை அடுத்த நீலாங்கரையில் இயங்கி வருகிறது ஊடகம் கலை அறிவியல் கல்லூரி (Media Arts &Science College). இதன் 2-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் விருது வழங்கும் விழா ரஷ்யன் கலாசார மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இக்கல்லூரியின் மூலம் ஆண்டு தோறும் ஊடகவியலாளர் விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதை திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் பெற்றார். இந்த விருதை ஜெயம் ராஜா அவருக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பாபு ராமசாமி வரவேற்றார். வள்ளியப்பன் ராஜூ நினைவுப் பரிசுகளை வழங்கி கல்லூரியின் வளர்ச்சி கனவு பற்றியெல்லாம் விவரித்தார், மேலும் கல்லூரியின் ஆண்டு மலரை ஜெயம் ராஜா வெளியிட ரஷ்யன் கலாச்சார மையத்தைச் சேர்ந்த அனஸ்த் தீஷியா பெற்றுகொண்டார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ஜெயம் ராஜா மனம் திறந்து பேசினார். அவர் பேசியதாவது:-,

"நான் சென்னை அரசு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். என் தம்பி விஷுவல் கம்யூனிகேஷன் படித்தான். யார் படிப்பு உயர்வு என்று எங்களுக்குள் போட்டி வரும். தான் படிப்பதுதான் பெரியது என்று அவன் கூறுவான். விஸ்காம் தான் பெரியதா.. என்று அவன் மீது எனக்குப் பொறாமை வரும். அந்த இரண்டு படிப்பும் எங்களுக்குள் பொறாமையை உண்டாக்கியது. ஆனால் இந்த கல்லூரியில் இவை இரண்டுமே இணைந்தே இருப்பது சிறப்பான விஷயம். ஆனால் இந்த கல்லூரியில் இவை இரண்டும் இணைந்தே இருப்பது சிறப்பான விஷயம். இங்கே மாணவர்களைச் சேர்த்திருக்கும் பெற்றோர் கவலைப்பட வேண்டாம். ஒன்றும் கற்றுக் கொள்ளாமல் வருபவர்களுக்கே சினிமா, மீடியா உலகம் ஆதரவு தருகிறது. உங்கள் பிள்ளைகள் கற்றுக் கொண்ட பின்புதான் வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயமாக எதிர்காலம் உண்டு.

வாழ்க்கை நம் ஆன்மாவைக் கசக்கிப் பிழியும் போது கலைதான் மீட்டுத் தரும். அப்படிப்பட்ட கலையை தொழிலாகச் செய்யும்போது கிடைக்கிற சுகம் தனி. வேறு எதிலும் இது கிடைக்காது. சினிமாவில் எனக்கு என் தந்தைதான் குரு. இங்கு சொல்ல நினைப்பது முக்கியம். அதைவிட முக்கியம் சொன்ன விஷயம் போய் சேர வேண்டும். எதாவது சொல்லும் போது எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பார் அப்பா. புரியவில்லை என்றால் 'நான் முட்டாள்பா என்ன சொல்ல வர்றேன்னு சொல்லு' என்பார். ஒரு படத்தை 'ஹவுஸ் ஃபுல்' போர்டு போட வேண்டும் என்றால் படம் எல்லாருக்கும் புரிய வேண்டும்.

'தில்லாங்கடி' படத்தில் வரும் 'சொல் பேச்சு கேட்காத சுந்தரியே' பாடலில் 10 ஜெயம் ரவி எப்படி வந்தார்?! இப்படி ஒரு காட்சி இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். படிக்கிறது முக்கியம். அதேபோல் கிரியேட்டிவிட்டி அதைவிட முக்கியம். 100 பேர் அமைதியாக இருக்கும் போது ஒருவர் சத்தம் போட்டால்தான் வித்தியாசம். 100 பேர் சத்தம் போடும் போதும் ஒருவர் அமைதியாக இருப்பது வித்தியாசமில்லை. வித்தியாசம் வெளியே தெரிய வெண்டும். 'கிரியேட்டிவிட்டி என்றால் என்ன அர்த்தம்? 'தோற்பதற்கு தைரியம் இருப்பதுதான் கிரியேட்டிவிட்டி. வெற்றிக்கு இரண்டு காரணங்களைச் சொல்வதாக ஒருவன் கூறினானாம்.

ஒன்று எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லாதீர்கள் என்றானாம். இன்னொன்று அவன் சொல்லவே இல்லை. ஏனெனில் எல்லாவற்றையும் எல்லாரிடமும் கூறக்கூடாது அல்லவா? அதனால் அவன் சொல்லவில்லை' என்று அருமையாக பேசி முடித்தவரிடம் ஊடக மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் நேருக்கு நேர் பதில் கூறினார் ஜெயம் ராஜா.

அவற்றில் சில..

உங்கள் படங்கள் குடும்பம் செண்டிமெண்ட் என்றும் மட்டும் நம்பி உள்ளதே....?

என்ன கதை என்பதைவிட அதில் சொல்லப்படும் கருத்து முக்கியம் உலக பொருளாதார பிரச்சினையில் எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டபோது நம் இந்திய மட்டும் பாதிக்கப்படவில்லை. அதற்கு காரணம் நமது பேமிலி செட்டப்தான். இந்த குடும்ப கூட்டமைப்பு சேர்த்து வைக்கும் குணம் கொண்டது. இப்படி சேர்த்து வைக்கும் பொறுப்புதான் நம்மையெல்லாம் பிரித்து போய்விடமால் இணைத்துப் பார்க்கிறது. அப்படிப்பட்ட குடும்பம், பாசத்தை விலக்கிவிட்டு படம் செய்வது நல்லதா?

அடுத்தபட அறிவிப்பு தாமதமாகிறதே?

ஒரு வெற்றியைப் போலவே அதை தக்க வைப்பது முக்கியம் சிரமமும் கூட. இந்த அக்கறைதான் தாமதத்தின் காரணம் விரைவில் இரண்டொரு மாதத்தில் அடுத்தபட அறிவிப்பு வரும்.

விருப்பித்தான் இந்த தொழிலுக்கு வந்தீர்களா?

ஆமாம். சினிமா குடும்பச் சூழலில் வளர்ந்தவன் நான். நான் வரக்கூடாதா? நான் விரும்பி பரிபூர்வமாக பிடித்து அடம்பிடித்து வீம்பு பிடித்துதான் இந்தத் துறைக்கு வந்தேன்.

உங்கள் கனவு படம் எது? எப்போது?

அடுத்தப்படம் எனக்குப் பிடித்த படமாக இருக்கும். ஒவ்வொரு படியாக ஏறவே ஆசை. முதலில் பிடித்த கதை, பிறகு கனவுப்படம்.

தமிழ் சினிமா நேற்று இன்று நாளை எப்படி?

மனித வாழ்க்கை நேற்று இன்று நாளை போலவே சினிமா இருக்கிறது. இருக்கும். ஏனென்றால் சமுதாயத்தை பிரதிபலிப்பதுதான் சினிமா. முன்பெல்லாம் திரையில் படம் தெரிவதே ஆச்சரியமாக இருக்கும். இன்று நிறைய படங்கள் பார்த்து சாதாரண பார்வையாளனேன் 'கிரிடிக்' என்கிற விமர்சகர் அளவுக்கு வளர்ந்திருக்கிறான். இந்த தலைமுறையைப் புரிந்து செய்ய வேண்டியிருக்கிறது.

நடிக்க வேண்டியிருந்தால் எந்த கதாநாயகியுடன் நடிக்க விரும்புகிறீர்கள் ?

என் மனைவி கூடத்தான். முதல்பட அனுபவம் சந்தோஷம் இன்றும் உள்ளதா?

எத்தனை படம் எடுத்தாலும் முதல்பட அனுபவம் மறக்க முடியாது. நான் முதலில் 'ஹனுமான் ஜங்ஷன்' என்கிற தெலுங்குப் படத்தைதான் இயக்கினேன். தியேட்டரில் போய்ப் பார்த்த போதுதான் கீழே விழுந்து சிரிப்பதை பார்த்தேன். அவ்வளவுதான் சந்தோஷமாக இருந்தது. தமிழில் முதல்படம் 'ஜெயம்' அதுவும் தம்பி ரவியை ஹீரோவாக்கிய படம். உதயம் தியேட்டரில் தம்பியைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடியது. ஆரவாரம் செய்தது. ஒரே நாளில் ஹீரோவாகி விட்டான்; அதை மறக்கவே முடியாது. ரசிகர்கள் மட்டும் மறப்பார்களா என்ன?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum