ஜெயம்' வில்லனுக்கு ஜோடியாக நயன்!
Page 1 of 1
ஜெயம்' வில்லனுக்கு ஜோடியாக நயன்!
கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. 'ஜெயம்' படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார். இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழில் நேரடிப் படமாகும். தெலுங்கிலும் வெளியாகிறது. தனுஷ் நடித்த 'உத்தமபுத்திரன்', தரணி இயக்கிய 'ஒஸ்தி', விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் 'சமரன்' போன்ற படங்களைத் தயாரித்த ஜெய்பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. 'தேவதையைக் கண்டேன்', 'மலைக்கோட்டை', 'திருவிளையாடல்' என வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார். எகிப்து, சீனா, துருக்கி போன்ற நாடுகளின் வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளது. இந்த படத்துக்காக நயன்தாரா ஒரு கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்குற நடிகைகள் பட்டியலில் நயன்தாரா பெயரும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அட! இம்புட்டு நாளா இந்த மகாராணிக்காக எம்புட்டு பேரு காத்துக்கிடந்திருக்கானு பாருங்களேன்.....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி
» அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்: அன்னக்கொடியும் கொடிவீரனும் சங்கதி இது!
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» பிரித்விராஜுக்கு ஜோடியாக ஷ்ரேயா
» மீண்டும் கதை கேட்கிறார் நயன்?
» அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்: அன்னக்கொடியும் கொடிவீரனும் சங்கதி இது!
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» பிரித்விராஜுக்கு ஜோடியாக ஷ்ரேயா
» மீண்டும் கதை கேட்கிறார் நயன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum