ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தில் சூர்யா!
Page 1 of 1
ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தில் சூர்யா!
கமல், விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் எடுத்து பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஜாக்கிசான் படங்களை தமிழில் டப்பிங் செய்து தொடர்ந்து வெளியிட்டு வந்ததால் ஜாக்கிசான் இவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இவரது தயாரிப்பில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசையை ஜாக்கிசான் வெளியிட்டார். ஜாக்கிசான் நடிக்கும் படம் ஒன்றிணை தயாரிக்க வேண்டும் என்பது இவரது நீண்ட கால ஆசை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ரவிச்சந்திரன். ஜாக்கிசான் நடித்த ARMOUR OF GOD படத்தின் அடுத்த பாகத்தினை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறாராம். படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி. இப்படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போல அமைக்கப்பட்டு இருக்கிறதாம். அந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர், இந்தி சினிமாவின் முன்னணி நாயகர், என படத்துக்கு பலம் சேர்க்க திட்டம் இருக்கிறதாம். இந்திய மொழிகள் பலவற்றிலும் டப்பிங் செய்து வெளியிட்டு, இந்தியாவில் கலெக்ஷனைக் கூட்ட இது உதவும். இதற்காக சல்மான்கானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். ஜாக்கிசானுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் சல்மான்கான் இதற்கு சம்மதம் தெரிவிக்க கூடும் என்கிறார்கள். தமிழில் சூர்யாவை ஒப்பந்தம் செய்யலாமா என யோசித்து வருகிறார்கள். ம்ம்ம்... ப்ளாக் பஸ்டருக்கு பிட்ட போட்டுக்கிட்டிருக்காரே....!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரூ.28 கோடிக்கு பில்லா-2வை வாங்கிய ஆஸ்கர் ரவிச்சந்திரன்!!
» விஜய் படத்திலிருந்து ஜெனிலியா நீக்கம் – ஆஸ்கர் ரவிச்சந்திரன்
» எகிறும் வேலாயுதம் பட்ஜெட்…. பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!
» மலையாள ரீமேக் படத்தில் சூர்யா!
» சிங்களப் படத்தில் நடிக்கவில்லை – சூர்யா
» விஜய் படத்திலிருந்து ஜெனிலியா நீக்கம் – ஆஸ்கர் ரவிச்சந்திரன்
» எகிறும் வேலாயுதம் பட்ஜெட்…. பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!
» மலையாள ரீமேக் படத்தில் சூர்யா!
» சிங்களப் படத்தில் நடிக்கவில்லை – சூர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum