தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ.28 கோடிக்கு பில்லா-2வை வாங்கிய ஆஸ்கர் ரவிச்சந்திரன்!!

Go down

ரூ.28 கோடிக்கு பில்லா-2வை வாங்கிய ஆஸ்கர் ரவிச்சந்திரன்!! Empty ரூ.28 கோடிக்கு பில்லா-2வை வாங்கிய ஆஸ்கர் ரவிச்சந்திரன்!!

Post  ishwarya Thu Apr 04, 2013 1:25 pm

மங்காத்தா படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பில்லா-2வை ரூ.28 கோடிக்கு வாங்கியிருக்கிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அஜித்தின் பில்லா படம் ‌மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் 2ம் ‌பாகமாக மீண்டும் அஜித் நடிப்பிலேயே உருவாகி இருக்கும் படம் பில்லா-2. இப்படத்தில் டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக மாறினார் என்பதே கதை. படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டனும், இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் புரூணா அப்துல்லாவும் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீசுக்கான வேலைகள் நடந்து வருகிறது.

பில்லா படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. கடைசியாக ரிலீசான அஜித்தின் மங்காத்தா படமும் வசூலில் சாதனை படைத்தது. இதனால் பில்லா-2 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் பில்லா 2 படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட பெரிய பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பில்லா-2 படத்‌தை ரூ. 28 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் விளம்பரத்துக்காக ரூ. 2 கோடி வரை செலவு செய்யப்படும் எனத் தெரிகிறது. தற்போது ஐ.பி.எல் போட்டிகள் நடந்து வருவதால், போட்டிகள் முடிந்ததும், அதாவது ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum