தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீராமராஜ்ஜிய'த்துக்காக விருது பெற்றார் நயன்!

Go down

ஸ்ரீராமராஜ்ஜிய'த்துக்காக விருது பெற்றார் நயன்! Empty ஸ்ரீராமராஜ்ஜிய'த்துக்காக விருது பெற்றார் நயன்!

Post  ishwarya Tue Mar 19, 2013 12:40 pm

ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சங்கம் சார்பில் 14-வது உகாதி புரஸ்கார் மற்றும் மகிளா ரத்னா விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் கே.ரோசய்யா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். 'ஸ்ரீராமராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. நயன்தாராவுக்கு விருதையும் பாராட்டுச்சான்றிதழையும் கவர்னர் ரோசய்யா வழங்கினார். பழம்பெரும் பாடகி பி.வசந்தா, நடனக்கலைஞர் அனிதா குகா உள்பட 4 பேருக்கு மகிளா ரத்னா விருதும், இயக்குநர் பாபு, ஒளிப்பதிவாளர் பி.ஆர்.கே.ராஜூ, குழந்தை நட்சத்திரம் பேபி யானி, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உள்பட 21 கலைஞர்களுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. விழாவில், திருப்பதி தேவஸ்தானம் முன்னாள் தலைவர் டி.கே.ஆதிகேசவலு நாயுடு, சினிமா தயாரிப்பாளர் கே.பிரசாத், தூர்தர்ஷன் அதிகாரி ஜெயந்தி, ஓய்வுபெற்ற கூடுதல் டி.ஜி.பி. கே.வி.எஸ்.மூர்த்தி, ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சங்க நிறுவனத் தலைவர் பெத்திரெட்டி சீனிவாஸ் ஆகியோர் பேசினார்கள். பழம்பெரும் பின்னணிப் பாடகர் பி.பி.சீனிவாஸ் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர். வாழ்த்துகள் சீதா தேவி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» டிஎஸ்ஆர் விருது பெறும் நயன், அனுஷ்கா, தமன்னா, டாப்ஸி, அர்ஜுன், மோகன்பாபு.
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» ஏய், ‘பிராம்ப்டிங்’ பண்ணாதே: நயன்
» ரஜினி விருதை பெற்றார் விஜய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum