முதலில் சினிமா.. அப்பறம்தான் குடும்பம்! - ஜெனிலியா
Page 1 of 1
முதலில் சினிமா.. அப்பறம்தான் குடும்பம்! - ஜெனிலியா
குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட நேரம் இருக்கிறது. ஆனால் இப்போது நடிப்பில்தான் எனது முழுக்கவனமும் இருக்கிறது என்றார் ஜெனிலியா. பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் மணந்தார் ஜெனிலியா. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில் வெளியான 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தின் ஒரிஜினல் தெலுங்கு 'பொம்மரிலு'. இதில் ஹாசினி என்ற பாத்திரத்தில் நடித்தேன். ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்தது. இப்படத்துக்கு பிறகு ஆந்திராவில் நிறைய பெண் குழந்தைகளுக்கு ஹாசினி என்று பெயர் வைத்தனர். அதேபோல் 'கதா' என்ற படத்தில் சித்ரா என்ற வேடமும் பேசப்பட்டது. ஒரே சாயல் கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை. ஒவ்வொரு பாத்திரத்திலும் வித்தியாசம் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை அதிகளவில் குறைத்துக்கொள்ளும் எண்ணம் இல்லை. முன்பு வருடம் முழுவதும் நடித்துக்கொண்டிருந்தேன். இப்போது சில நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்வேன். ரிதேஷை சிறுவயதிலிருந்து தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் உள்ள குணங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். இப்போதைக்கு நான் முழுமூச்சாக குடும்ப வாழ்வில் ஈடுபட விரும்பவில்லை. அதற்கு இன்னும் காலமும், வயதும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது தெலுங்கில் 2 படம் நடித்துள்ளேன். இந்தியில் நடித்துள்ள 'சந்தோஷ் சுப்ரமணியம்' ரீமேக் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. எனக்கேற்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பேன். ஹாசினி மேடம்... அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக ஆசப்படுறீங்களோ....?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதலில் குடும்பம் தான்!
» சினிமா துறையில் மோசமான மனிதர்கள் – ஜெனிலியா
» சினிமா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த ஜெனிலியா
» நம் குடும்பம்
» முதலில் சகுனிதான் – சர்க்கரை செய்தி
» சினிமா துறையில் மோசமான மனிதர்கள் – ஜெனிலியா
» சினிமா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த ஜெனிலியா
» நம் குடும்பம்
» முதலில் சகுனிதான் – சர்க்கரை செய்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum