முக்கூட்டு சாம்பார்
Page 1 of 1
முக்கூட்டு சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு = 100 கிராம்
கடலை பருப்பு = 100 கிராம்
பயத்தம் பருப்பு = 100 கிராம்
மஞ்சள் பொடி = சிறிதளவு
பெருங்காயம் = சிறிதளவு
சின்ன வெங்காயம் = 100 கிராம்
தக்காளி = 200 கிராம்
தேங்காய் = கால் மூடி
மிளகாய் வற்றல் = 6
பச்சை மிளகாய்= 3
புளி = எலுமிச்சை அளவு
கடுகு = 1 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பருப்பு எல்லாவற்றையும் தேவையான தண்ணீர் சேர்த்து பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து வேக விட்டுக் கடைந்து கொள்ளவும். சின்ன வெங்காயம் உரித்துக் கொள்ளவும். தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
தேங்காய், மிளகாய் வற்றல் அரைத்துக் கொள்ளவும். புளி கரைத்து வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கி வந்ததும் தக்காளி சேர்த்து அரைத்து தேங்காய் சேர்த்து மேலும் சிறிது வதக்கி கரைத்த புளி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.
கொதித்துப் புளி வாசம் அடங்கியதும் கடைந்த பருப்பைச் சேர்த்து மீண்டும் சிறிது கொதிக்க வைத்து கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான முக்கூட்டு சாம்பார் தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, ஆப்பம், அடை, சப்பாத்தி, பூரி, உப்புமா, பொங்கலோடு பரிமாற சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
துவரம் பருப்பில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.
பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முக்கூட்டு சாம்பார்
» முக்கூட்டு சாம்பார்
» முருங்கைக்காய் சாம்பார்
» சாம்பார் பொடி
» முருங்கைக்காய் சாம்பார்
» முக்கூட்டு சாம்பார்
» முருங்கைக்காய் சாம்பார்
» சாம்பார் பொடி
» முருங்கைக்காய் சாம்பார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum