கம்பு சாகுபடி செய்ய உதவும் கோடை மழை
Page 1 of 1
கம்பு சாகுபடி செய்ய உதவும் கோடை மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்துவருவதால், விவசாயிகள் குறைந்த நாட்களில் அதிக லாபம் பெற கம்பு சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் குறைந்த நீரை கொண்டு குறைந்த வயதில் அதாவது 80 லிருந்து 85 நாட்களில் மகசூல் தரக்கூடிய கம்பு பயிரை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
கம்பினை மானாவாரி பயிராகவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்யக்கூடிய மழையை கொண்டு இறவை பட்டத்திலும் சாகுபடி செய்யலாம்.
கம்பானது புல்குடும்பத்தை சேர்ந்த ஆப்பிரிக்கா நாட்டை தாயகமாக கொண்டது.
கம்பானது 150 செ.மீ., முதல் 180 செ.மீ., வரை உயரம் வளரக்கூடியதாகும். கிளைக்கும் தன்மை கொண்டதுமான கம்பு பயிர் மிகவும் வறட்சியான பகுதிகளிலும், சத்துக்குறைவான மண்பாங்கான நிலங்களிலும், சத்து அதிகம் உள்ள வண்டல் மண் நிலங்களிலும் பயிர் செய்யலாம்.
கம்பு பயிர் சாகுபடியில் முக்கிய தொழில் நுட்பங்களை கடிப்பிடித்தால் இறவை கம்பு சாகுபடியில் ஏக்கருக்கு ஆயிரத்து 200 கிலோவும், மானாவாரி கம்பில் ஏக்கருக்கு 800 கிலோவும் மகசூல் பெறலாம்.
ஒரு கிலோ கம்பு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும் இறவை கம்பு சாகுபடியில் ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாயும், மானாவாரி கம்பு சாகுபடியில் 8 ஆயிரம் ரூபாயும் லாபம் பெறலாம்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஐசிஎம்வி221, ஐசிஎம்எஸ்7703 மற்றும் கோ7 ரக கம்புகளை சாகுபடி செய்யலாம்.
ஏக்கருக்கு 2 கிலோ விதைக்கு தலா ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம், மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போபாக்டீயா நுண்ணுயிர் கலவையை 200 மி.லி., ஆரிய அரிசி கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் கம்பு நடவு செய்ய மூன்று சென்ட் பரப்பு நாற்றங்கால் தேவை,
300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 9 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தினை கலந்து கடைசி உழவுக்கு முன்பாக சீராக இடவேண்டும்.
இதனைதொடர்ந்து மேட்டுப்பாத்திகள் அமைத்து விதைகளை விதைக்க வேண்டும்.
ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரத்துடன் தழை, மணி,சாம்பல் சத்துதரவல்ல யூரியா மற்றும் பாஸ்பேட் மற்றும் முயூரேட் ஆப் பொட்டாசினை கலந்து கடைசி உழவுக்கு முன் உழவு செய்து நன்கு கலக்க வேண்டும்.
16 நாள் வயதுடைய நாற்றுகளை ஒரு குத்துக்கு 2 வீதம் வயலில் நடவு செய்ய வேண்டும்.
நடவு வயலில் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ சிறுதானிய நுண்ணூட்ட சத்தினை நட்டவுடன் போதுமான அளவு மணலுடன் கலந்து மேலாக இடவேண்டும்.
மேலும் தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் கலவையை தொழு உரத்துடன் கலந்து நடவு வயலில் இட வேண்டும்.
கம்பு பயிரில் தூர் கட்டும் பருவத்தில் ஏக்கருக்கு 14 கிலோ தழைச்சத்து தரவல்ல 31 கிலோ யூரியாவினை இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
இந்த தொழில் நுட்பங்களை கம்பு சாகுபடியில் விவசாயிகள் கையாண்டு குறைந்தநாட்களில் குறைந்த நீரை கொண்டு இறவை கம்பு சாகுபடி செய்து பயன் பெறலாம். இது குறித்து மேலும் விபரங்கள் அறிய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கம்பு சாகுபடி செய்ய உதவும் கோடை மழை
» மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்

» திருந்திய நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
» கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum