தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'ஓமணப்பெண்ணே' புகழ் பென்னி தயாளின் 'வாழ்க்கை'!

Go down

'ஓமணப்பெண்ணே' புகழ் பென்னி தயாளின் 'வாழ்க்கை'! Empty 'ஓமணப்பெண்ணே' புகழ் பென்னி தயாளின் 'வாழ்க்கை'!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:37 pm

இளம் ரசிகர்களின் இதயம் திருடிய கௌதம் மேனனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் 'ஓமணப்பெண்ணே', '7-ம் அறிவு' படத்தில், 'ஓ ரிங்கா ரிங்கா', 'வாரணம் ஆயிரம்' படத்தில், 'அடியே கொல்லுதே', 'ஏத்தி ஏத்தி' உட்பட ஏராளமான இளமை துள்ளும் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருப்பவர்தான் பென்னி தயாள். இவர் பாடி கூடுதல் இசையுடன் உருவாக்கியிருக்கும் தனி ஆல்பம் 'வாழ்க்கை டி.ஜே. இதில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்டோபர் பிரதீப் என்பவர் பாடல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும் இந்த அனைத்து பாடல்களையும் பென்னி தயாள் பாடியிருக்கிறார். ஒரு பாடலை மட்டும் டாக்டர் பீமுடன் இணைந்து பென்னி தயாள் பாடியிருக்கிறார். இது ராப் வகை பாடலாகும். ஆல்பத்தின் ஒரிஜினல் இசை சார்லஸ் பாஸ்கோ. இவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இதன் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பென்னி தயாள் இந்த முயற்சி பற்றி கூறியதாவது, சினிமாவில் பாட ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு லன்டனில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோதுதான் இப்படியொரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதில் சார்லஸ் பாஸ்கோவுடன் இணைந்து நானும் இசை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு இசை அமைப்பேனா என்பதை என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தொடர்ந்து இதுபோன்ற ஆல்பங்களை வெளியிட ஆர்வமாக இருக்கிறேன்" என்று தனது பாடகர் தொழிலுக்கு வில்லங்கம் வந்து விடக்கூடாதே என்ற பயத்தோடு பவ்யமாக பேசினார். இந்த ஆல்பத்தில் உள்ள நான்கு பாடல்களை லண்டனிலும், இரண்டு பாடல்களை சென்னையிலும் பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum