டைரக்டர் சொன்னது சுத்தமா புரியல..! - உதயநிதி
Page 1 of 1
டைரக்டர் சொன்னது சுத்தமா புரியல..! - உதயநிதி
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் கதையே இல்லை என்று தயாரிப்பாளரும், பட ஹீரோவுமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின். சினிமாவில் நடித்திருப்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிக்க வேண்டும் என்ற பெரிய திட்டம் எதுவும் இல்லை. சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக உயர்ந்த நேரம், நிறைய பேர் நீங்களே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன? என்று கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன மவுனத்தை மட்டுமே பதிலாகத் தந்தேன். இந்த இடம் பலருக்கு கனவு. சிலருக்கு வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு இடம் இப்போது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. வேள்வி, தவம் எதுவும் இல்லாமல் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். ஆனால் இது பெரிய இடம். இதை தக்க வைத்துக்கொள்ள இப்போது நேரம் வந்திருக்கிறது. நடிக்க வேண்டும் என நினைத்தபோது டைரக்டர் பாண்டிராஜ் என்னிடம் 'வம்சம்' படத்தின் கதையை சொன்னார். 'பருத்தி வீரன்' படத்தின் பாதிப்பு அதில் இருந்தது. அது மாதிரியான ஒரு கதை என் உடல்வாகுக்கு சரியாக வருமா? என்ற கேள்வி எனக்குள் வந்தது. அப்போது ஹீரோவாகும் எண்ணத்தில் இருந்த அருள்நிதியிடம் பாண்டிராஜை அனுப்பி வைத்தேன். அந்த கதை அவனுக்குப் பிடித்திருந்தது. அப்போதுதான் டைரக்டர் ராஜேஷ் ஒரு ஒன் லைன் கதை சொன்னார். சுத்தமாக புரியவில்லை. அவர் மூன்று மணி நேரம் கதை சொல்லியிருந்தாலும் நிச்சயம் எனக்கு அது புரிந்திருக்காது. ஏனென்றால் அதில் கதையே இல்லை. அப்படி ஒரு கதைதான் எனக்கு தேவைப்பட்டது. அதுவுமில்லாமல் ராஜேஷின், 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்கள் எனக்கு பிடிக்கும். அந்த சாயலிலேயே இதுவும் இருந்ததால் நடிக்க வந்து விட்டேன்", என்று கூறியிருக்கிறார். அரசியல் வாரிசாச்சே... என்ன வருமோ அதமட்டும் பண்ணணும்னு நெனச்சது புத்திசாலிதனந்தான். அப்பா.. தாத்தா நெறச்சதே கோடிகள் இருக்கும் போது நீங்க ஏன் குட்டிக்கரணமடிக்க போறீங்க.....?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பவரு... சொன்னது தவறு?
» மனதை சுத்தமா செய்
» சிம்புவை ‘சிக்ஸ் பேக்’ வைக்கச் சொன்னது யாரு?
» கடவுள் பக்தியை பற்றி இவர்கள் சொன்னது....
» மேக் அப் போட்டா சுத்தமா இருக்கணும்!
» மனதை சுத்தமா செய்
» சிம்புவை ‘சிக்ஸ் பேக்’ வைக்கச் சொன்னது யாரு?
» கடவுள் பக்தியை பற்றி இவர்கள் சொன்னது....
» மேக் அப் போட்டா சுத்தமா இருக்கணும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum