தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு: பாடல் வரிகள் மற்றும் வீடியோ

Go down

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு: பாடல் வரிகள் மற்றும் வீடியோ Empty பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு: பாடல் வரிகள் மற்றும் வீடியோ

Post  meenu Mon Mar 18, 2013 2:14 pm



திரைப்படம்: சந்தித்த வேளை
நடிகர்கள்: கார்த்திக்,கௌசல்யா, ரோஜா
இசையமைப்பாளர்: தேவா

பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா



தீப தீப தீப தீப தீப தீப… கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீப… கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீப…

பெண்கிளியே பெண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு – என்
பாட்டு வரி பிடித்திருந்தால் – உன்
சிறகால் பச்சைக்கொடி காட்டு (2 )

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது..
வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண்கிளி பொய் சொன்னால் ஆண்கிளி தூங்காது

ஆண்கிளியே ஆண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் – உன்
பல்லவியை நீ மாற்று..

பெண் கண்களே நாடகம் ஆடுமா..?
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா..?
யார் சொல்லியும் பெண் மனம் கேட்க்குமா?
கை தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா?
விடை கேட்டேன் கேள்வி தந்தாய் – இது
புதிரான புதிர் அல்லவா?
கேள்விக்குள்ளே பதில் தேடு – அது
சுவையான சுவை அல்லவா?
உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை..

பெண்கிளியே பெண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு – என்
பாட்டு வரி பிடித்திருந்தால் – உன்
சிறகால் பச்சைக்கொடி காட்டு

என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள் – உன்
காதிலே கேட்கவே இல்லையா?
நீ ஆழி போல் அலைகளை ஏவினாய் – நான்
கரையைப்போல் மௌனமாய் நேவினேன்..
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் – இது
பெண் பூசும் அறிகாரமா?
உண்மை காண வன்மை இல்லை
உங்கள் விழி என் மேல் பழி போடுமா?
நிலவை பிழிவதற்கு வலிமை உண்டு – உன்
நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை..
கானல் நீர் தேடாதே அங்கே மீன் இல்லை

ஆண்கிளியே ஆண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் – உன்
பல்லவியை நீ மாற்று..

பெண்கிளியே பெண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு – என்
பாட்டு வரி பிடித்திருந்தால் – உன்
சிறகால் பச்சைக்கொடி காட்டு
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum