தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் இசை புயலின் ஆட்சி!!

Go down

மீண்டும் இசை புயலின் ஆட்சி!!  Empty மீண்டும் இசை புயலின் ஆட்சி!!

Post  ishwarya Mon Mar 18, 2013 1:56 pm

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இசை அமைக்கவில்லை. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் 2010 ஆண்டு வெளிவந்தது. இந்நிலையில், 2012-ம் ஆண்டு தொடர்ச்சியாக தமிழ் படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார் ரஹ்மான். ரஜினி நடித்து வரும் 'கோச்சடையான்', மணிரத்னம் இயக்கி வரும் 'கடல்', விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்', தனுஷ் நடிக்க இருக்கும் 'மரியான்', ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்க இருக்கும் படம் என வரிசையாக தனது தமிழ் ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க இருக்கிறார். இது போக கௌதம் மேனன் இயக்க இருக்கும் டி.வி சீரியல் ஒன்றிற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த சீரியலுக்கு சன் டி.வியில் PRIME TIME-ல் SLOT வாங்கி இருக்கிறார்கள். இந்த டி.வி சீரியலில் பார்த்திபன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. புயலுக்கு முன் அமைதினு சொல்லுவாங்க.... ஒரு வருட அமைதிக்கு பின் வரும் இந்த புயலால் அம்புட்டும் பீஸ் பீஸா பறக்காம இருந்தா சரி. எந்த வுட்டையும் விடாம வீசுற ஒரே புயல் இந்த இசைப்புயல் தாங்க.....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum