தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் நிதின் சத்யா தாயார் மரணம்

Go down

நடிகர் நிதின் சத்யா தாயார் மரணம் Empty நடிகர் நிதின் சத்யா தாயார் மரணம்

Post  ishwarya Mon Mar 18, 2013 1:47 pm

நாடக கலைஞரும், நடிகர் நிதின் சத்யாவின் தாயாருமான லெட்சுமி பிரசாத் காலமானார். அவருக்கு வயது 55. 'சென்னை-600028', 'ராமன் தேடிய சீதை', 'சத்தம் போடாதே' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் நிதின் சத்யா. இவரது தாயார் லெட்சுமி பிரசாத். சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வந்தார். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் நாடக கம்பெனியில் இவர் பணியாற்றி இருக்கிறார். மேலும் சில டி.வி. சீரியல்களிலும், சினிமாவில் ஓரிரு படங்களிலும் தலைகாட்டியுள்ளார். தனக்குள் இருந்த சினிமா ஆர்வத்தை தனது மகனுக்கும் புகுத்தி அவரையும் சினிமாவில் நடிக்க வைத்தார். தற்போது இளம் நாயகராக வளர்ந்து வருகிறார் நிதின் சத்யா. இந்நிலையில் லெட்சுமி பிரசாத் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அவர் நேற்று காலமானார். மறைந்த லெட்சுமி பிரசாத்தின உடல், அவரது இல்லமான போயஸ் கார்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மாலை அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கூடலின் ஆழ்ந்த அனுதாபங்கள்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum