தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாடகி டி.கே.கலாவின் தாயார் நடிகை சண்முகசுந்தரி மரணம்

Go down

பாடகி டி.கே.கலாவின் தாயார் நடிகை சண்முகசுந்தரி மரணம் Empty பாடகி டி.கே.கலாவின் தாயார் நடிகை சண்முகசுந்தரி மரணம்

Post  ishwarya Wed Apr 03, 2013 6:21 pm

பாடகி டி.கே.கலாவின் தாயார் நடிகை சண்முகசுந்தரி மரணம் Fdf694cb-bdda-4c4f-9945-305f595934dd_S_secvpf.gif2பழம்பெரும்
நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் ‘இதயக்கனி’, ‘நீரும்
நெருப்பும்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘என் அண்ணன்’ போன்ற படங்களில்
நடித்துள்ளார்.

சிவாஜியுடன் ‘லட்சுமி கல்யாணம்,’ ‘வடிவுக்கு வளைகாப்பு’ படங்களிலும்,
ஜெமினியுடன் ‘மாலதி’ படத்திலும் நடித்துள்ளார். 45 வருடங்களாக 750
படங்களில் நடித்துள்ளார். ஏராளமான படங்களுக்கு ‘டப்பிங்’ குரலும்
கொடுத்துள்ளார். டி.பி.கஜேந்திரன் இயக்கிய ‘மிடில் கிளாஸ் மாதவன்’ படத்தில்
வடிவேலுவின் தாய் கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் வடிவேலு பகலில்
பாசக்கார பிள்ளையாகவும், இரவில் குடித்து வந்து தாயிடம் தகராறு செய்வது
போன்றும் நடித்தார். அப்போது தாய் சண்முகசுந்தரியிடம் அது வேறு வாய் இது
நாற வாய் என்று பேசும் வசனம் பிரபலம்.

சண்முகசுந்தரிக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு சிகிச்சை
பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. சண்முகசுந்தரிக்கு
டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என 5 மகள்கள் உள்ளனர். டி.கே.கலா
பிரபல பாடகி ஆவார். சண்முகசுந்தரி உடல் சாலி கிராமம் மதியழகன் நகரில் உள்ள
அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் சார்பில்
வாகை சந்திரசேகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாளை காலை 10
மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் உடல் தகனம் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum