100 சதவீதம் துல்லியமாகாத வரை நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது: டோனி
Page 1 of 1
100 சதவீதம் துல்லியமாகாத வரை நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது: டோனி
நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமையானது (டி.ஆர்.எஸ்.) 100 சதவீதம் துல்லியமானது என இந்தியா நம்பும்வரை அம்முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.
இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்த வேண்டுமென அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அதற்கு சம்மதிக்கவில்லை.
மேல்பேர்னில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களால் சில தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது, டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்துவதற்கு இந்தியா மறுப்பு தெரிவிப்பது தொடர்பான விமர்சனங்கள் தீவிரமடைந்தன. இந்நிலையிலேயே டோனி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த ‘ஹொட் ஸ்பொட்’ தொழில்நுட்பம் 100 சதவீதம் துல்லியமானவை எனக் கருதச் செய்யும் பல சம்பவங்கள் இங்கிலாந்தில் இடம்பெற்றதாகவும் அவுஸ்திரேலியாவுடனான போட்டிகள் தொடர்பாக தான் மேற்கொண்ட தீர்மானத்திற்கு இங்கிலாந்து அனுபவமும் ஒரு காரணம் எனவும் டோனி கூறியுள்ளார்.
‘நடுவர்கள் நீண்டகாலமாக அப்பணியை செய்து வருகின்றனர். தொழில்நுட்ப அதிகரிப்பால் அவர்களைச் சூழ்ந்த அழுத்தம் அதிகரிக்கிறது. இத்தொழில்நுட்பம் 100 சதவீதம் துல்லியமானவை அல்ல என நாம் கருதுகிறோம். இங்கிலாந்துடனான சுற்றுப்போட்டிக்கு முன்னர் நான் ஹொட்ஸ்பொட் தொழில்நுட்பத்தின் பெரிய விசிறியாக இருந்தேன். ஆனால், இங்கிலாந்தில் நடந்த விடயங்களால், நான் தொடர்ந்தும் அந்த நம்பிக்கையுடன் இல்லை’
இதில் 100 சதவீதம் உத்தரவாதம் இல்லை என்பதால் நான் தொடர்ந்தும் நடுவர்களின் தீர்ப்பையே விரும்புகிறேன். இது மனிதர்கள் தவறு செய்யும் ஒரு விளையாட்டு. பந்துவீச்சாளர் தவறு செய்யாவிட்டால் துடுப்பாட்ட வீரர் ஓட்டம் பெற முடியாது. துடுப்பாட்ட வீரர் தவறு செய்யாவிட்டால் பந்துவீச்சாளர் விக்கெட்டை பெற முடியாது. எனவே நடுவர்களை தொடர்ந்தும் இவ்விளையாட்டின் அங்கமாக நாம் கொண்டிருப்போம்’ என டோனி தெரிவித்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆட்டத்தை நிறுத்திய நடுவர்களின் முடிவால் அதிருப்தி: மஹேல
» நடுவருடன் வாக்குவாதம்: மஹேலவுக்கு 10 சதவீதம் அபராதம்
» துப்பாக்கி பட வழக்கு: தீர்ப்பை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்
» விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
» காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum