2011 இன் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக ராகுல் டிராவிட் : DNA இன் கருத்துக்கணிப்பில் தெரிவு
Page 1 of 1
2011 இன் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக ராகுல் டிராவிட் : DNA இன் கருத்துக்கணிப்பில் தெரிவு
பிரபல Daily News & Analysis (DNA) இணையத்தளம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றின் படி, 2011ம்
ஆண்டின் மிகச்சிறந்த இந்திய விளையாட்டு வீரராக ராகுல் டிராவிட் தெரிவாகியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த ரசிகர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்த இக்கருத்து கணிப்பில் 48% வீத வாக்குகளை பெற்று டிராவிட் முதலிடத்தையும் சச்சின் டெண்டுல்கர் 20% வீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டனும், உலக கோப்பையை கடந்த முறை இந்திய அணி கைப்பற்ற காரணமாக இருந்தவருமான தோனிக்கு 14% வீத வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.
இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் தனிமனிதராக போராடி நெருக்கடி கொடுத்திருந்ததாலும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகத்திறமையாக தனது துடுப்பாட்டத்தை கொடுத்திருந்ததாலும் டிராவிட்டுக்கு ரசிகர்கள் வாக்களித்துள்ளதாக DNA இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையின் புதிய பட்டியலில் ராகுல் டிராவிட் முதல் பத்திடங்களிலிருந்து வெளியேறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ள போதும் டிராவிட்டிற்கு 11 வது இடத்திற்கு சென்றுள்ளார். பந்துவீச்சாளர்களில் சஹீர் கான் மாத்திரம் தொடர்ந்து முதல் பத்திடங்களுக்குள் இடம்பிடித்திருக்கிறார். அவருக்கு 6 வது இடம் கிடைத்துள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 2011 இன் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக ராகுல் டிராவிட் : DNA இன் கருத்துக்கணிப்பில் தெரிவு
» சுடிதாரை எப்படி தெரிவு செய்வது ???
» உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக லியோனெல் மெஸ்ஸி மீண்டும் தேர்வு
» உலகின் மிகச்சிறந்த வளர்ப்பு நாய்களும் நுண்ணறிவும்....!
» இனி பூஸ்ட் குடிக்க சச்சின் வரமாட்டார்! அடுத்த அம்பாசடராக கோஹ்லி தெரிவு! Pics
» சுடிதாரை எப்படி தெரிவு செய்வது ???
» உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக லியோனெல் மெஸ்ஸி மீண்டும் தேர்வு
» உலகின் மிகச்சிறந்த வளர்ப்பு நாய்களும் நுண்ணறிவும்....!
» இனி பூஸ்ட் குடிக்க சச்சின் வரமாட்டார்! அடுத்த அம்பாசடராக கோஹ்லி தெரிவு! Pics
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum