இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: ஸ்ரீகாந்த் விளக்கம்
Page 1 of 1
இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: ஸ்ரீகாந்த் விளக்கம்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெற்ற முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு டோனியின் தலைமைதுவத்தை அவுஸ்திரேலிய முன்னாள் அணித் தலைவர் இயன் செப்பல், பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் உள்ளிட்டோர் குறை கூறினார்கள்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய தொடர் குறித்து இந்திய அணியின் தேர்வுகுழு தலைவர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவிக்கையில்,
முதல் இரு டெஸ்டில் ஏற்பட்ட தோல்விகளுக்கு, ஒரு குழுவாக இந்திய அணியின் துடுப்பாட்டம் போதுமானது அல்ல. அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் இந்திய அணி விளையாடிய விதம் ஆச்சரியம் அளிக்கிறது. அதே சமயம் இந்திய அணியை விட அவுஸ்திரேலிய அணி மிகச்சிறப்பாக விளையாடியதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். தோல்விகளுக்கு வேறு காரணங்களை தேடுவது அர்த்தம் இல்லை. அதனை மறந்து விட்டு, அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு போட்டியில் தோல்வியடையும் போது, தோல்விக்குரிய காரணமாக நீங்கள் எதையும் சொல்லலாம். ஆனால் இந்த விடயத்தில் டோனி நேர்மையாக நடந்து கொண்டார். யார் மீதும் அவர் பழி போடவில்லை. தாங்கள் துடுப்பாட்டத்தில் சரியாக பிரகாசிக்கவில்லை என்ற உண்மையை அவர் ஒப்புக் கொண்டார். எனவே இந்திய அணியின் துடுப்பாட்டம் அவ்வப்போது நன்றாக இருந்ததே தவிர, சீராக இருக்கவில்லை.
தற்போதைய தருணத்தில் இது தான் மிகச்சிறந்த அணி. அத்துடன் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்திய அணியை விட அவுவுஸ்திரேலியா சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அணியின் ஒவ்வொரு வீரர்களும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணி விளையாடிய போது, அந்த தொடரை சமநிலையாக்கியது. அதில் குறைந்தது முதல் 4 துடுப்பாட்ட வீரர்களில் யாராவது ஒருவர் சதம் அடித்திருந்தனர். ஆனால் இங்கு நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இங்கு துடுப்பாட்ட வீரர்கள் அரைசதம் அடித்தார்களே தவிர, யாரும் பெரிய ஓட்ட எண்ணிக்கையை குவிக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களுக்கு கிடைக்கும் சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மெல்போர்னில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் என்று நல்ல நிலைமையில் இருந்தது. ஷேவாக், டிராவிட், டெண்டுல்கர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள். ஆனால் அதன் பிறகு வந்த வீரர்களில் யாரும் ஓட்டங்களை எடுக்கவில்லை. எப்போதுமே முதலாவது டெஸ்டில் தோல்வியடையும் போது, அதன் பிறகு தானாகவே நெருக்கடி வந்து விடும்.
பெர்த்தில் நடைபெற உள்ள 3ஆவது டெஸ்டில் சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும். கடந்த முறை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது என தெரிவித்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது
» இந்திய வில்வித்தை அணியின் பதக்க கனவு கலைந்தது! தீபிகா குமாரி ‘அவுட்’!
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» ஏழையாய் பிறக்க காரணம் என்ன?
» திருக்கார்த்திகை தீபம் ஏற்ற காரணம் என்ன???
» இந்திய வில்வித்தை அணியின் பதக்க கனவு கலைந்தது! தீபிகா குமாரி ‘அவுட்’!
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» ஏழையாய் பிறக்க காரணம் என்ன?
» திருக்கார்த்திகை தீபம் ஏற்ற காரணம் என்ன???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum