ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட வீரருக்கு பீபா தங்கப்பந்து விருது: சூரிச் நகரில் கெளரவம்
Page 1 of 1
ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட வீரருக்கு பீபா தங்கப்பந்து விருது: சூரிச் நகரில் கெளரவம்
0
2011 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பீபா ‘தங்கப் பந்து’ அல்லது ‘தங்க பலூன்’(Fifa Ballon d’Or) விருதை ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லயனல் மெஸி வென்றுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பீபா பலோன் டி ஓர் வைபவத்தின்போது லயனல் மெஸிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சர்வதேச கால்பந்தாட்ட அணிகளின் பயிற்றுநர்கள், தலைவர்கள், மற்றும் ஊடகவியலாளர்களால் இவ்விருதுக்குரியவர் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
24 வயதான லயனல் மெஸி, ஸ்பெய்னின் பார்ஸிலோ கழகத்திற்காகவும் விளையாடிவருகிறார் இம்முறை மெஸி|யுடன் மன்செஸ்டர் யுனைடெட் கழகத்தில் விளையாடும் போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பார்ஸினா கழகத்திற்காக விளையாடும் ஸ்பெய்ன் வீரர் ஸவி ஆகியோரையும் முந்திக்கொண்டு இவ்விருதை வென்றுள்ளார்.
மெஸிக்கு 47.88 சதவீத வாக்குகளும் ரொனால்டோவுக்கு 21.60 சதவீத வாக்குகளும் ஸவிக்கு 9. 23 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீருருக்கான பலோன் டி ஓர் விருதும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பீபா விருதும் 2010 ஆண்டுமுதல் ஒன்றிணைக்கப்பட்டு பீபா பலோன் டி ஓர் விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டிலும் இவ்விருதை லயனல் மெஸி வென்றார்.
இவ்விருதுகள் ஒன்றிணைப்படுவதற்கு முன் 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பலோன் டி ஓர் விருதும் லயனல் மெஸிக்கு வழங்கப்பட்டது. எனவே இவ்விருதை 3 தடவைகள் வென்ற நான்கு வீரர்களில் ஒருவராக லயனல் மெஸி விளங்குகிறார்.
இதேவேளை இம்முறை உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைக்கான விருது உலக சம்பியனான ஜப்பானிய அணியின் தலைவி ஹொமாரே சவாவுக்கு வழங்கப்பட்டது.
ஆண்கள் அணிகளின் சிறந்த பயிற்றுநராக பார்ஸிலோனா கழகத்தின் ஜோசப் குவார்டியாலோவாவும் பெண்கள் அணிகளின் சிறந்த பயிற்றுநராக ஜப்பானிய தேசிய அணி பயிற்றுநர் நொரையோ சசாகியும் தெரிவாகினர்.
பீபா தலைவரின் சிறப்பு விருது மன்செஸ்டர் யுனைடெட் கழகத்தின் பயிற்றுநர் சேர் அலெக்ஸ் பேர்குசனுக்கு வழங்கப்பட்டது.
வருடத்தின் சிறந்த கோலுக்கான பீபா புஸ்காஸ் விருதை சன்டோஸ் கழகத்தை சேர்ந்த 19 வயது பிரேஸில் வீரரான நெய்மர் வென்றார். பிரேஸில் சம்பியன்ஷிப் போட்டிகளில் பிளெமிங்கோ கழகத்திற்கு எதிராக அடித்த கோலுக்காக இவ்விருது நெய்மருக்கு வழங்கப்பட்டது.
முறையான நடத்தைக்கான விருது ஜப்பானிய கால்பந்தாட்ட சங்கத்திற்கு வழங்கப்பட்டது. கொலம்பிய பாடகி ஷகீரா இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கெளரவம் கெளரவம்
» உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக லியோனெல் மெஸ்ஸி மீண்டும் தேர்வு
» ஊக்கமருந்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரருக்கு 3 மாதம் தடை!
» ஆட்ட நிர்ணய சதி: இங்கிலாந்து வீரருக்கு 4 மாத சிறை
» மாலியின் திம்பக்டு நகரில் பிரஞ்சு அதிபர் ஒல்லோந்த்
» உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக லியோனெல் மெஸ்ஸி மீண்டும் தேர்வு
» ஊக்கமருந்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரருக்கு 3 மாதம் தடை!
» ஆட்ட நிர்ணய சதி: இங்கிலாந்து வீரருக்கு 4 மாத சிறை
» மாலியின் திம்பக்டு நகரில் பிரஞ்சு அதிபர் ஒல்லோந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum