ஒலிம்பிக் ஆக்கி (Hockey) தகுதி சுற்று டெல்லியில் இன்று தொடக்கம்
Page 1 of 1
ஒலிம்பிக் ஆக்கி (Hockey) தகுதி சுற்று டெல்லியில் இன்று தொடக்கம்
லண்டன் ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. ஒலிம்பிக்குக்கு தகுதி இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் இழந்த பெருமையை இந்திய அணி மீட்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜுலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது. இதில் ஆக்கி விளையாட்டு பிரிவில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை 9 அணிகள் தகுதி பெற்று விட்டன.
மீதமுள்ள 3 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இந்த மூன்று இடத்திற்கு மொத்தம் 18 அணிகள் போட்டி போடுகின்றன. அவை தலா 6 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு, மூன்று தகுதி சுற்று போட்டிகள் இந்தியா, அயர்லாந்து, ஜப்பானில் நடத்தப்படுகிறது. இதன்படி முதலாவது ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று போட்டி டெல்லி தயான் சந்த் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் மைக்கேல் நோப்சுக்கு (ஆஸ்திரேலியா) இந்த தொடர் மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது. எந்த அணியையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், அனைத்து அணிகளையும் ஒரே மாதிரியான தீவிர உத்வேகத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் வீரர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் இரவு 8 மணிக்கு தொடங்கும். 26-ந்தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.
பெண்கள் பிரிவிலும் ஒலிம்பிக் தகுதி சுற்று ஆட்டங்கள் இதே மைதானத்தில் இன்று முதல் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, உக்ரைன், கனடா, போலந்து, தென்ஆப்பிரிக்கா, இத்தாலி ஆகிய அணிகள் மோதுகின்றன. இவற்றில் இருந்து சாம்பியன் ஆகும் அணி ஒலிம்பிக்கில் விளையாட லண்டனுக்கு செல்லும்.
இந்திய அணி கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் விளையாடியது. 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் விளையாட இந்திய பெண்கள் அணி முடிந்த வரை கடுமையாக முயற்சிக்கும். தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி உக்ரைனுடன் மோதுகிறது. பெண்கள் பிரிவில், இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகளை டென் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அரை இறுதியில் சானியா ஜோடி தகுதி
» இலங்கை இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1 மணிக்கு கோலாகல ஒலிம்பிக் கொண்டாட்டம்..!
» இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு மட்டுமே – டோனி
» ஹாக்கி உலக லீக்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
» வேப்பஞ்சேலை 108 சுற்று பிரார்த்தனை
» இலங்கை இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1 மணிக்கு கோலாகல ஒலிம்பிக் கொண்டாட்டம்..!
» இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு மட்டுமே – டோனி
» ஹாக்கி உலக லீக்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
» வேப்பஞ்சேலை 108 சுற்று பிரார்த்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum