சமையல்:கொள்ளு- பருப்பு பொடி
Page 1 of 1
சமையல்:கொள்ளு- பருப்பு பொடி
புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் 'ஹார்ஸ்கிராம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது. அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது. ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும். இவ்வளவு நன்மைகள் கொண்ட கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமே....
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 4 கப்
கொள்ளு - 1/2 கப்
மிளகு - 20
மிளகாய் வற்றல் - 10
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 2 டீ ஸ்பூன்
செய்முறை:
* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.
* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.
சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.
பருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, 'கொள்ளு பருப்பு பொடி' சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொள்ளு- பருப்பு பொடி
» சமையல்:ரசப் பொடி
» சமையல்:மல்டி பொடி சாதம்
» பருப்பு பொடி
» ஆந்திரா பருப்பு பொடி
» சமையல்:ரசப் பொடி
» சமையல்:மல்டி பொடி சாதம்
» பருப்பு பொடி
» ஆந்திரா பருப்பு பொடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum