தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி

Go down

இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி Empty இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி

Post  meenu Mon Mar 18, 2013 12:13 pm

காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான முதலாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

340 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி போட்டியின் நான்காம் நாளான இன்று சற்று முன் சகல விக்கெட்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்று 75 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

போட்டி விபரங்கள் வருமாறு:

இலங்கை முதல் இன்னிங்ஸ் – 318
*மஹீல ஜயவர்த்தன – 180 ஓட்டங்கள்
*ஜேம்ஸ் என்டர்ஸன் – 5 விக்கெட்கள்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் – 193
*இயன் பெல் – 52 ஓட்டங்கள்
*ரங்கன ஹேரத் – 6 விக்கெட்கள்

இலங்கை இரண்டாம் இன்னிங்ஸ் – 214
*பிரசன்ன ஜயவர்த்தன – 61 ஓட்டங்கள்
*கிரேம் ஸ்வான் – 6 விக்கெட்கள்

இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸ் – 264
*ஜொனதன் ட்ரொட் – 112 ஓட்டங்கள்
*ரங்கன ஹேரத் – 6 விக்கெட்கள்
*சுராஜ் ரந்திவ் – 4 விக்கெட்கள்

போட்டியின் ஆட்ட நாயகனாக ரங்கன ஹேரத் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டு ரெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum