சாதனை வீரர் கோஹ்லி: அதிரடி நாயகனாக உருவெடுப்பு
Page 1 of 1
சாதனை வீரர் கோஹ்லி: அதிரடி நாயகனாக உருவெடுப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகனாக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான கோஹ்லி(வயது 23).
கோஹ்லியின் ஆட்டம் கடந்த ஒன்றரை வருடமாக அபார வளர்ச்சி பெற்றுள்ளது. 85 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கோஹ்லி 11 சதங்கள் அடித்துள்ளார்.
இவற்றில் 10 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 7 சதங்கள் சேஸிங்கில் அடிக்கப்பட்டவை. அவுஸ்திரேலியாவில் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக சேஸிங்கில் கோஹ்லி மிரட்டினார். 86 பந்தில் 133 ஓட்டங்கள் விளாசி அனைவரையும் வியக்க வைத்தார்.
அதே போன்று ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 148 பந்தில் 183 ஓட்டங்கள் விளாசினார்.
முதல் பேட்டிங்கைவிட 2வது பேட்டிங்கில் கோஹ்லி அசத்துவது அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. முன்பெல்லாம் இமாலய இலக்கு அமைந்தால் ஒருவித பதற்ற நிலை உருவாகும்.
முன்னணி வீரர்கள் சச்சின், சேவாக், காம்பீர் விரைவிலேயே ஆட்டமிழந்து விட்டால் அவ்வளவுதான் என்ற கதி ஏற்படும். ஆனால் சமீப காலமாக இந்த நிலை மாறியிருக்கிறது.
கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் ஓட்டக் குவிப்பில் முதலிடத்தில் இருந்த கோஹ்லி இந்த ஆண்டும் தொடர் வேட்டையில் களமிறங்கியுள்ளார்.
இந்த ஆண்டில் அவருடைய சராசரி 73 ஆகும். ஸ்ட்ரைக்ரேட் 93 ஆக உள்ளது. 85 ஆட்டங்கள் ஆடிய நிலையில் சச்சின், லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், பொண்டிங், டீன்ஜோன்ஸ், பெவன், டோனி ஆகியோர் இவ்வளவு அதிக சதங்கள் அடித்தது கிடையாது. அதிகபட்சமாக லாரா 5, பொண்டிங் 5 சதம் அடித்துள்ளனர்.
183 ஓட்டங்கள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அணித்தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கங்குலி 1999 உலக கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 183 ஓட்டங்கள் விளாசினார். 2005ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக டோனி 183 ஓட்டங்கள் விளாசியுள்ளார். தற்போது கோஹ்லியும் இதே போன்று ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாதனை வீரர் கோஹ்லி: அதிரடி நாயகனாக உருவெடுப்பு
» ஒலிம்பிக்ஸ்:வடகொரிய எடைதூக்கும் வீரர் சாதனை
» நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி
» பிரேசில் அழகியிடம் ‘அவுட்’ ஆன விராத் கோஹ்லி! (படங்கள்)
» இலங்கை 51 ஓட்டங்களால் வெற்றி: ஆட்ட நாயகனாக நுவன் குலசேகர
» ஒலிம்பிக்ஸ்:வடகொரிய எடைதூக்கும் வீரர் சாதனை
» நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி
» பிரேசில் அழகியிடம் ‘அவுட்’ ஆன விராத் கோஹ்லி! (படங்கள்)
» இலங்கை 51 ஓட்டங்களால் வெற்றி: ஆட்ட நாயகனாக நுவன் குலசேகர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum