வேண்டுமென்றே மோசமாக ஆடிய வீராங்கனைகள்! விசாரணைக்கு உத்தரவு!
Page 1 of 1
வேண்டுமென்றே மோசமாக ஆடிய வீராங்கனைகள்! விசாரணைக்கு உத்தரவு!
0
அடுத்த சுற்றில் எளிதான அணியுடன் மோத வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே மோசமாக விளையாடியதாக சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண்கள் பேட்மிண்டன் ஜோடிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து விசாரணைக்கு சர்வதேச பேட்மிண்டன் கழகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில் சீன வீரர், வீராங்கனைகள் எதிர்பாராத அளவுக்கு தங்கப் பதக்கங்களைக் குவித்து வருவது குறித்து சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், தற்போது சீனா, தென்கொரியா மற்றும் இந்தோனேசியா பேட்மிண்டன் வீராங்கனைகள் மோசடி ஆட்டத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, தென் கொரியாவைச் சேர்ந்த 2 ஜோடிகள் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பேட்மிண்டன் ஜோடி மீதுதான் தற்போது புகார்கள் எழுந்துள்ளன.
வெம்ப்ளி அரங்கில்தான் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. உலகத் தரம் வாய்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் இங்கு கடுமையாக போராடி விளையாடி வருகின்றனர். ஆனால் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் மட்டும், தங்களுக்கு காலிறுதிப் போட்டிகளில் எளிதான அணி வர வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே தோற்பது போல விளையாடியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இதையடுத்து இந்த நான்கு ஜோடிகள் மீதும் விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்திருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச பேட்மிண்டன் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நான்கு ஜோடிகளும் ஏற்கனவே காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டனர். இந்த நிலையில் கடைசி சுற்றுப் போட்டியில் அவர்கள் மோதியபோதுதான், காலிறுதியில் எளிய அணியுடன் மோத வேண்டும் என்பதற்காக தங்களது கடைசிப் போட்டியில் தோற்பது போல இவர்கள் விளையாடியுள்ளனராம்.
சீனா வீராங்கனைகளான வாங் சியோலி மற்றும் யூ யாங் ஜோடி, கொரிய வீராங்கனைகளான ஜங் கியூரங் யூன் மற்றும் கிம் ஹா னா ஜோடியுடன் விளையாடியபோது வெற்றி பெறும் எண்ணத்திலேயே விளையாடவில்லை. மாறாக எளிதான ஷாட்களைக் கூட அடிக்காமல் வேண்டும் என்றே விட்டதாக புகார் எழுந்தது.
இதற்கு முக்கியக் காரணமாக, இப்போட்டியில் வென்றால் முதலிடத்தைப் பிடித்து விடும் இந்த சீன ஜோடி. ஆனால் அப்படி வந்தால், தங்களது நாட்டைச் சேர்ந்த டியான் குயிங் மற்றும் ஜாவோ யூன்லாயிடம் மோத வேண்டி வரும். அதை இறுதிப் போட்டி வரையாவது தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே நேற்றைய போட்டியில் கொரியாவிடம் தோற்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடியதாம் இந்த சீன ஜோடி என்கிறார்கள்.
அதேசமயம், நேற்றைய போட்டியில் கொரிய வீராங்கனைகளும் கூட தோற்பது போலவே விளையாடினர். இரு அணியினரும் வேண்டும் என்றே விளையாடுவதைப் பார்த்த போட்டி நடுவர் இரு அணி வீராங்கனைகளையும் கூப்பிட்டு ஒழுங்காக விளையாடுமாறு எச்சரித்தார்.
இதையடுத்து போட்டி தொடர்ந்தது. இப்போட்டியில் கொரிய ஜோடி 21-14, 21-11 என்ற் செட் கணக்கில் வென்றது.
இதேபோல இன்னொரு கொரிய ஜோடியான ஹா ஜங் இயூன், கிம் மின் ஜங் ஜோடியும், இந்தோனேசியாவுக்கு எதிரான போட்டியில் தோற்பது போல விளையாடியது. அதே போல இந்தோனேசிய ஜோடியும் வேண்டும் என்றே தோற்கும் நோக்கில் ஆடியது. ஆனால் இந்தப் போட்டியில் இந்தோனேசியாவே வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியிலும் இரு நாட்டு வீராங்கனைகளும் வேண்டும் என்றே விளையாடியதால் போட்டியைப் பார்த்தவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். மேலும் போட்டி நடுவரும் கோபமடைந்தார். இரு அணியினரையும் அழைத்து கடுமையாக எச்சரித்தார்.இரு அணியினரையும் தகுதி நீக்கம் செய்யப் போவதாக கடுமையாக எச்சரித்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்தியாவை சென்றடைந்த பாகிஸ்தான் வீராங்கனைகள்!
» மைதானத்திலேயே தூங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள்! Pics
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
» தண்ணீருக்கடியில் சண்டை போட்டு மேலாடையை கிழித்துக் கொண்ட வீராங்கனைகள்!
» வரலாற்றுப் புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகள்
» மைதானத்திலேயே தூங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள்! Pics
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
» தண்ணீருக்கடியில் சண்டை போட்டு மேலாடையை கிழித்துக் கொண்ட வீராங்கனைகள்!
» வரலாற்றுப் புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum