இந்தியாவில் பார்ட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை!
Page 1 of 1
இந்தியாவில் பார்ட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை!
இந்திய பயணத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் தனியார் பார்ட்டிகளில் பங்கேற்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) தடை விதித்துள்ளது.
கடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்பு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை.
பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு மத்திய அரசு ஒருவழியாக அனுமதி அளிக்க பாகிஸ்தான் அணி இம்மாதம் இந்தியா செல்கிறது.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடருக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நாட்களில் (டிசம்பர் 23 – ஜனவரி 6) இரு அணிகளும் 2 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன.
போட்டி நடைபெற உள்ள மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க பி.சி.பி செய்தி தொடர்பாளர் நதீம் சர்வார், பாதுகாப்பு மற்றும் காவல் துறை தலைவர் ஈஷான் சாதிக் ஆகியோர் அடங்கிய குழு இந்தியா சென்றுள்ளது.
இது குறித்து நதீம் சர்வார் கூறுகையில், இந்திய பயணத்தின் போது பாகிஸ்தான் வீரர் தனியார் பார்ட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேபோல வீரர்கள் தங்கவுள்ள ஓட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. வீரர்களை பார்க்க, அவர்களது உறவினர், நண்பர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கையில் நடந்த டி20 உலகக் கிண்ண தொடரின் போது பின்பற்றப்பட்ட அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பாகிஸ்தான் வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அதிர்ச்சி மீண்ட கவர்ச்சி நடிகை: மீண்டும் பார்ட்டிகளில் கலக்கல் (படங்கள் இணைப்பு)
» அதிர்ச்சி மீண்ட கவர்ச்சி நடிகை: மீண்டும் பார்ட்டிகளில் கலக்கல் (படங்கள் இணைப்பு)
» விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது!
» விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் சிறந்த மருந்தாகும்.
» நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum