நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்பாடு
Page 1 of 1

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்தது. இந்த சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்தபோது, அரண்மனையில் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்படும். பின்னர் மன்னர் குடும்பத்தினர் திருவனந்தபுரத்துக்கு சென்ற பின்னர் திருவனந்தபுரத்தில்
நவராத்தி விழா நடந்து வருகிறது. விழாவுக்காக ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபபுரம் தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் இருந்து விக்ரகம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும்.
சரஸ்வதி தேவிக்கு பக்க துணையாக சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், வேளிமலை முருகன் ஆகிய விக்ரகங்கள் கேரள பாரம்பரிய வரவேற்போடு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு வரும் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் விக்ரகங்கள் நவராத்திரி பூஜையில் வைக்கப்படும். இந்த விழாவுக்காக பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதிதேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை தேவி, வேளிமலை முருகன் விக்ரகங்கள் மற்றும் வெள்ளிக்குதிரை வாகனம் ஆகியவை இன்று காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பவனியாக புறப்பட்டு செல்கின்றன.
இந்நிகழ்ச்சிக்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை தேவி விக்ரகம் பத்மநாபபுரம் புறப்படும் நிகழ்ச்சி நேற்று (11ம் தேதி) காலை நடந்தது. குமரி மற்றும் கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் செண்டை மேளம் முழங்க பல்லக்கு பவனி தொடங்கியது. பத்மநாபபுரத்தில் இருந்து இன்று காலை புறப்படும் சாமி விக்ரகங்கள் இரவு குழித்துறை சென்ற டையும். நாளை குழித்துறையில் இருந்து மீண்டும் பவனி புறப்பட்டு திருவனந்தபுரத்தை அடையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிகாகோ பட விழாவில் பங்கேற்க பசங்க படம் தேர்வு
» இந்தியாவில் பார்ட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை!
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» “பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum