தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேவாக் நீக்கத்துக்கு தோ‌னியே காரணம் – பயிற்சியாளர் குற்றச்சாட்டு!

Go down

சேவாக் நீக்கத்துக்கு தோ‌னியே காரணம் – பயிற்சியாளர் குற்றச்சாட்டு! Empty சேவாக் நீக்கத்துக்கு தோ‌னியே காரணம் – பயிற்சியாளர் குற்றச்சாட்டு!

Post  meenu Sun Mar 17, 2013 12:59 pm


30


shewagஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இருந்து சேவாக் நீக்கப்பட்டதற்கு கேப்டன் தோ‌னியே காரணம் என்று சேவாக்கின் பயிற்சியாளர் ஷர்மா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

டெல்லியில் கட‌ந்த 6ஆ‌ம் தே‌‌தி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் சேவாக் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்தும் சேவாக் நீக்கப்பட்டுள்ளார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சேவாக் நீக்கப்பட்டதற்கு அவரது இளம் வயது பயிற்சியாளரான ஏ.என்.ஷர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷர்மா கூறுகை‌யி‌ல், இந்திய கிரிக்கெட் வாரியமும், கேப்ட‌ன் தோ‌னியும், சேவாக்குக்கு எதிரான சில தனிப்பட்ட காரணத்துக்கான அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் சேவாக்குக்கு இடம் அளிக்கப்படவில்லை என்றதும் அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்பது எனக்கு தெரியும். இது மிகவும் எதிர்பாராத விஷயமாகும்.

மோசமான ரன் எடுத்தும் இந்திய அணியில் நீண்ட காலம் இடம் பெற்ற வீரர்கள் யார் என்பதை என்னால் சொல்ல முடியும். ஆனால் ஷேவாக் அப்படி நீடிக்கவில்லை. அணி தேர்வு முறையில் தவறு உள்ளது எ‌ன்றார‌் ஷ‌ர்மா.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum