சேமியா இட்லி
Page 1 of 1
சேமியா இட்லி
தேவையானப்பொருட்கள்:
சேமியா 2 கப்
ரவா.
தயிர் – 3 கப்
உப்பு- 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு, சீரகம்- கொரகொரப்பாக பொடித்தது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2 அல்லது 3
இஞ்சி – ஒரு சிறு துண்டு
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பச்சை மிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது) சேர்த்து பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் சேமியா மற்றும் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு, சற்று வாசனை வரும் வரை வறுக்கவும். (நீண்ட நேரம் வறுக்க தேவையில்லை).
வறுத்த சேமியா-ரவாக் கலவையை கீழே இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் அதில் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். தேவைப்பட்டால், சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, அதன் பின், இட்லி தட்டில் எண்ணை தடவி அதில் மாவை ஊற்றி, இட்லி பானையில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum