தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவரை பருப்பு கூட்டு

Go down

அவரை பருப்பு கூட்டு  Empty அவரை பருப்பு கூட்டு

Post  oviya Sat Mar 16, 2013 9:13 pm

தேவையானப்பொருட்கள்:

அவரை – தேவைக்கு ஏற்ப
துவரம் பருப்பு – 1 ஆழாக்கு/கப்
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2 (காய்ந்த மிளகாய்)
தேங்காய் – 1/2 மூடி
பெருங்காயம் – 1 சிட்டிகை
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்

செய்முறை:

அவரைக்காயை பொடியாக நறுக்கி கழுவி நீர்விட்டு வேகவைக்கவும்
துவரம் பருப்பை மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
காய்கள் வேகும் பொழுது சாம்பார் பொடி, உப்பு போடவும்.
காய்கள் நன்றாக வெந்தபின் வெந்த பருப்பை போடவும்.
கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் – இவற்றை எண்ணை விட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, துறுவிய தேங்காயையும் சேர்த்து நீர்விட்டு கெட்டியாக அரைக்கவும்.
பிறகு 1 ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து கொதிக்கும் கூட்டில் விடவும்.
பெருங்காயப் பொடியை ஒரு சிட்டிகை சேர்த்து சற்று நேரத்தில் இறக்கவும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum