கேரட் பொடிமாஸ்
Page 1 of 1
கேரட் பொடிமாஸ்
தேவையான பொருள்கள்:
கேரட் = அரை கிலோ
வெங்காயம் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 4
சோம்பு = 1ஸ்பூன்
தேங்காய் = அரை மூடி
எண்ணெய் = 2 ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு = 1 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். சோம்பைப் பச்சையாகப் பொடி செய்யவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கியதும் துருவிய கேரட்டை போட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து கிளறி வைக்கவும்.
கடைசியாக பொடித்த சோம்பு, துருவிய தேங்காய் போட்டுக் கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான கேரட் பொடிமாஸ் தயார். இதை எல்லா வகை ரைஸோடும், சப்பாத்தியோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது.
இதனால் குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும். உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள், ஆஸ்துமா போன்றவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum