உருளைக்கிழங்கு காளான் ஃபிரை
Page 1 of 1
உருளைக்கிழங்கு காளான் ஃபிரை
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு = அரை கிலோ
காளான் = 150 கிராம்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
எலுமிச்சை பழம் = பாதி
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
இஞ்சி = அரை அங்குலம்
பூண்டு = 1 முழுதாக
சின்ன வெங்காயம் = 50 கிராம்
தக்காளி = 50 கிராம்
கிராம்பு = 3
பிரிஞ்சி இலை = 1
வெங்காயத்தாள் = 2
எண்ணெய் = 3 ஸ்பூன்
வெஜிடபிள் ஸ்டாக் = 1 கப்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக விட்ட பின் உரித்து துண்டுகளாக வேண்டிய அளவில் நறுக்கவும். காளானை, உருளைக்கிழங்கு அளவிலேயெ நறுக்கி சிறிது மோர் கலந்த நீரில் 5 நிமிடம் போட்டு வைத்திருந்த பின் லேசாக அலசி மென்மையாக பிழியவும். அழுத்தி பிழிந்தால் காளான் இழை இழையாகப் பிய்ந்து விடும்.
இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியைப் பொடியாக அரியவும். வெங்காயத்தாளைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தட்டிய கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். இதனோடு அரைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து வெங்காயம், தக்காளி அரிந்ததையும் சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கி வந்ததும் மிளகாய் பொடி, சீரகப்பொடி சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
எல்லாம் வதங்கி பொடி வாசனைஅடங்கியதும் வெஜிடபிள் ஸ்டாக்கைக் கலக்கவும். இது சூடு வந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். வதங்கி நீர் பதம் வற்றி வரும் போது அதனோடு காளானை சேர்க்கவும்.
காளானை சேர்த்த பிறகு மரக்கரண்டியால் கிளறி விடவும். காளான் வெந்து மெத்தென்று ஆன பிறகு வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
சுவையான உருளைக்கிழங்கு காளான் ஃபிரை தயார். இதை எல்லா விதமான ரைஸோடும், சப்பாத்தி, பூரி, பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு காளான் ஃபிரை
» உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட்
» உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட்
» உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட்
» பலாக்கொட்டை ஃபிரை
» உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட்
» உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட்
» உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட்
» பலாக்கொட்டை ஃபிரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum