முருங்கைக்கீரை சாம்பார்
Page 1 of 1
முருங்கைக்கீரை சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு = 200 கிராம்
மஞ்சள் பொடி= சிறிதளவு
பெருங்காயம் = சிறிதளவு
முருங்கைக்கீரை – 1 கட்டு
வெங்காயம் = 2
தக்காளி = 100 கிராம்
மிளகாய் பொடி = 11/2 ஸ்பூன்
புளி = எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
கடுகு = 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விட்டு மசித்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையை இளசாக எடுத்து ஆய்ந்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவவும்.
குக்கரில் கரைத்த பருப்பை போட்டு கீரை, வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதித்ததும் கரைத்த புளி, துருவிய தேங்காய் சேர்த்துக் கொதிக்க விடவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்க்கவும். சாம்பார் நீர்க்க இருக்க கூடாது.
சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
முருங்கையில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முருங்கைக்கீரை சாம்பார்
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை வடை கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum