முருங்கைக்கீரை வடை கறி
Page 1 of 1
முருங்கைக்கீரை வடை கறி
தேவையான பொருள்கள்:
முருங்கைக்கீரை = 1 கட்டு
கடலை பருப்பு = 100 கிராம்
உளுத்தம் பருப்பு = 50 கிராம்
துவரம் பருப்பு = 100 கிராம்
மிளகாய் வற்றல் = 4
இஞ்சி = காலங்குலம்
பச்சை மிளகாய் = 2
சின்ன வெங்காயம் = 100 கிராம்
சோம்பு = அரை ஸ்பூன்
வெங்காயம் = 2
தக்காளி = 4
தேங்காய் = அரை மூடி
கசகசா = 1 ஸ்பூன்
தனியா பொடி = 1 ஸ்பூன்
கல்பாசி = அரை ஸ்பூன்
பட்டை = 2
ஏலக்காய் = 2
எண்ணெய் = 100 கிராம்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்கீரையை பழுப்பு நீக்கி ஆய்ந்துக் கொள்ளவும். கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை 1 மணி நேரம் ஊற விட்டுக் களைந்து கொள்ளவும்.
இதை மிளகாய் வற்றல், இஞ்சி, சோம்பு சேர்த்து கரகரப்பாகவும், கெட்டியாகவும் மிக்ஸியில் அரைக்கவும். பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி இதனோடு கலந்து உப்பு சேர்த்து கிளறவும்.
வாணலியில் எண்ணெய் காய விட்டுக் கொண்டு அதில் இந்த மாவு கலவையை பக்கோடா போடுவதைப் போல் போட்டு எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டில் எடுத்து ஆறவிடவும்
தேங்காயை துருவிக் கொள்ளவும். இதை கசகசாவோடு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் நீள நீளமாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். தக்காளியை அரிந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கல்பாசி, பட்டை, தட்டிய ஏலக்காய் சேர்த்து தாளிக்வும். அடுத்து இதனோடு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் அரைத்த தேங்காய் மசலாவைப் போட்டு மேலும் சிறிது வதக்கி தனியா பொடிசிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கி தளதளவென்று வரும் போது இதனோடு பொரித்து வைத்துள்ள முருங்கைக்கீரையை போட்டுக் கிளறி இறக்கவும்.
சுவையான முருங்கைக்கீரை வடை கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ், தோசை, இட்லி ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
முருங்கையில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum