ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
Page 1 of 1
ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
38
காலை வேளையில் சீக்கிரம் சமைக்கும் வகையில் இருக்கும் ரெசிபியைத் தான்
செய்ய நினைப்போம். ஏனெனில் யாருக்கும் காலையில் எழுந்ததும், நல்ல வகை
வகையாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. ஆகவே அப்போது உடலுக்கு
ஆரோக்கியத்தை தரும் வகையிலும், விரைவில் சமைக்கும் வகையிலும் ஒரு ரெசிபி
உள்ளது.
அதற்கு முட்டை, உருளைக்கிழங்கு இருந்தால் போதுமானது. இந்த ரெசிபிக்கு
ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் என்று பெயர். இது சாதாரணமாக செய்யும்
ஆம்லெட் போன்றது தான். ஆனால் என்ன உருளைக்கிழங்கு சேர்த்ததால், இது
உருளைக்கிழங்கு ஆம்லெட் ஆயிற்று. சரி, இப்போது அந்த ப்ரெஞ்ச்
உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை – 3
உருளைக்கிழங்கு – 2 (தோலுரித்து, சிறிதாக நறுக்கியது)
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு
உருகியதும், உருளைக்கிழங்கைப் போட்டு, பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதே
சமயம் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, கொத்தமல்லி, உப்பு மற்றும்
மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த
உருளைக்கிழங்கின் மீது அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி,
முட்டையை நன்கு வேக வைத்து, கவனமாக மடித்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
இப்போது சுவையான ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி!!!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெர்ஃப்யூம் வாங்குவது எப்படி? பயன்படுத்துவது எப்படி?
» ஆப்பிள் ப்ரெஞ்ச் டோஸ்ட்
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
» Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது?
» ஆப்பிள் ப்ரெஞ்ச் டோஸ்ட்
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
» Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum