பாடல்களில் ஆங்கில வார்த்தை கலப்பதா?: டைரக்டர் பேரரசு கண்டனம்
Page 1 of 1

அருவிக்கரையோரம் என்ற பெயரில் புது படம் தயாராகியுள்ளது. பாரதிமோகன் இப்படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்துக்கு வி.தஷி இசையமைத்துள்ளார். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. முதல் சி.டி.யை டைரக்டர் பேரரசு வெளியிட கோழி கூவுது பட நாயகன் அசோக் பெற்றுக் கொண்டார்.
விழாவில் டைக்டர் பேரரசு பேசியதாவது:-
அருவிக்கரையோரம் படத்தின் பாடல்களை திரையில் பார்த்தேன். அனைத்தும் பஞ்சாமிர்தம் போல் இருந்தன. இசையமைப்பாளர் வி.தஷியின் டியூனும் பாடலாசிரியர் பாரதி மோகன் வரிகளும் ரசிக்கும் விதமாக இருந்தது. இசையின் ஆதிக்கம் இல்லாமல் அனைத்து பாடல்களையும் திரும்ப திரும்ப கேட்கிற மாதிரி இருந்தது.
தற்போது நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெறுகிறது. தமிழ் வார்த்தைகள் குறைந்து போய்விட்டது. இது வருத்தம் அளிப்பதாக உள்ளது. நூற்றுக்கு ஒரு பாட்டு ரெண்டு பாட்டு அப்படி இருக்கலாம். ஆனால் இப்போது எல்லா பாடல்களும் ஆங்கில கலப்பில்தான் வருகின்றன. எம்.எஸ். விஸ்வநாதன் காலத்திலும் இளையராஜா வந்த பிறகும் பாடல்களில் டியூன் தன்மை மாறியிருந்தது. ஆனால் பாடல்களில் தமிழ் வார்த்தைகளே இருந்தன. இப்போது அப்படி இல்லை. இதற்கு இசையமைப்பாளர்களும் இயக்குனர்களுமே பொறுப்பு.
தமிழில் தலைப்பு வைத்தால் தான் வரிச்சலுகை என்று சொன்ன பிறகு தமிழில் தலைப்புகள் வந்தன. அதுபோல் பாடல்களில் தமிழ் வார்த்தைகள் வருவதற்கு வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு பேரரசு பேசினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆக்ஷன் படம் எடுத்தா தப்பா…? குமுறுகிறார் டைரக்டர் பேரரசு
» டைரக்டர் பாரதிராஜாவுக்கு இளையராஜா கண்டனம்: படவிழாவில் என்னை அவமதித்து பேசுவதா?
» ஆங்கில படங்களை காப்பி அடிக்கும் இயக்குனர்களின் கதையா? : டைரக்டர் பேட்டி
» வார்த்தை தவறினாரா சசிகுமார்?
» வார்த்தை தவறினாரா அஜீத்...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum