இன்ப அதிர்ச்சி அளித்த பத்மஸ்ரீ பட்டம்: நடிகை ஸ்ரீதேவி பேட்டி
Page 1 of 1
இன்ப அதிர்ச்சி அளித்த பத்மஸ்ரீ பட்டம்: நடிகை ஸ்ரீதேவி பேட்டி
16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் திரை உலகில் கால் பதித்துள்ள நடிகை ஸ்ரீதேவி, 'தகுதியான இடங்களில் இருந்து கிடைக்கும் அங்கீகாரம், ஒவ்வொரு கலைஞருக்கும் அதிமுக்கியமானது' என்று கூறியுள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்றது குறித்து மும்பையில் பேட்டியளித்த நடிகை ஸ்ரீதேவி கூறியதாவது:-
ரசிகர்கள் இன்னும் நான் திரையில் தோன்றுவதை விரும்புகிறார்கள் என்பதை என் அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதின் மூலம் நான் கவுரவிக்கப்பட்டுள்ளேன். இந்த விருதுக்கு நான் தகுதியானவள் தானா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், நமது அரசால் கவுரவிக்கப்பட்டதால், நான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.
எனது வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பாக தற்போதைய நிலையில் நான் எந்த விருதையும் எதிர்பார்த்ததில்லை. இந்நிலையில், மிகவும் சிறப்பு வாய்ந்த பத்மஸ்ரீ விருது எனக்கு வழங்கப்பட்டதன் மூலம் இந்திய அரசு எனது கலைப்பணியை அங்கீகரித்துள்ளது என்பது தெளிவாகிறது. இந்த அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தகுதியான இடங்களில் இருந்து கிடைக்கும் ஒப்புதலும் அங்கீகாரமும் ஒவ்வொரு கலைஞருக்கும் அதிமுக்கியமானது. 6 வயதில் என் கலைப்பணியை நான் தொடங்கினேன். ஆனால், மிக நீண்ட காலமாக நடித்துக் கொண்டிருப்பது போல் நான் உணரவில்லை. ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரத்தை அணுகும் போதும், முதல் படத்தில் நடிப்பது போன்ற அக்கறையுடன் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிக்க ஆசைப்படுகிறேன்.
'இங்கிலிஷ் விங்கிலிஷ்' அப்படத்தின் இயக்குனர் கவுரி ஷிண்டேவின் முதல் படம். நானும் என் முதல் படமாகவே கருதி அந்த படத்தில் நடித்தேன். ஒரு நடிகை என்ற முறையில் கதாபாத்திரத்தை அனுபவித்து, ரசித்து நடிக்க வேண்டியது அவசியமானது ஆகும். ஒருவரின் அணுகுமுறையில் சோர்வு ஏற்பட்டு விட்டால், அந்த சோர்வு அவர்களது பணியில் பிரதிபலிக்கும். எனது தொழிலில் நான் கடைபிடித்த நேர்மை பத்மஸ்ரீ விருதின் மூலம் கவுரவிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். எனது வாழ்வில் இந்த தூரத்தை நான் சென்றடைய எனது ரசிகர்களும் என் கணவர் போனி கபூரும் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் அறிமுகமாக முயற்சி நடந்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் செய்தி உலவி வருகிறது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீதேவி, 'ஜான்விக்கு இப்போது 16 வயது தான் ஆகியது. இந்த உலகத்தை பார்க்கவும், தன்னைத் தானே புரிந்துக் கொள்ளவும் அவளுக்கு இன்னும் அனுபவம் தேவை. தற்போதைக்கு, நாங்கள் இருவரும் தோழிகளாக பழகி வருகிறோம்.
தாய் - மகள் என்ற உறவை விட, தோழிகள் என்ற நட்புணர்வு தான் எங்களிடையே மேலோங்கி நிற்கிறது. துணிகள் வாங்கவும் சினிமா பார்க்கவும் நாங்கள் ஒன்றாகவே செல்கிறோம். எனது இளம் வயது ஆசைகளை என் மகளின் மூலமாக நிறைவேற்றிக் கொள்வது இனிமையான அனுபவமாக உள்ளது'.
எனது இளம்வயதில் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வழியில்லாமல் நடிப்பு.... நடிப்பு என்று உழைத்துக் கொண்டே இருந்தேன். இன்னும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நான் பேராசை படவில்லை. 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' போன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால் கட்டாயமாக நடிப்பேன். எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டேன். ஆனால், உண்மையான வாழ்க்கையில் ஒரு தாயின் கதாபாத்திரத்தை அனுபவிப்பதை மட்டுமே நான் விரும்புகிறேன் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்ப அதிர்ச்சி அளித்த பத்மஸ்ரீ பட்டம்: நடிகை ஸ்ரீதேவி பேட்டி
» ஜெய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், சிம்பு
» ரசிகர் திருமணம்... சூப்பர் ஸ்டார் தந்த இன்ப அதிர்ச்சி!
» ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி! சிவாஜி 3D, எப்படி? விளக்குகிறார் ஏவி.எம். சரவணன்
» ரசிகர் திருமணத்துக்கு ரஜினி திடீர் வருகை: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
» ஜெய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், சிம்பு
» ரசிகர் திருமணம்... சூப்பர் ஸ்டார் தந்த இன்ப அதிர்ச்சி!
» ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி! சிவாஜி 3D, எப்படி? விளக்குகிறார் ஏவி.எம். சரவணன்
» ரசிகர் திருமணத்துக்கு ரஜினி திடீர் வருகை: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum