கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் நடிகர் விவேக்குக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
Page 1 of 1

சென்னை புறநகர் பகுதிகளான விமான நிலைய நுழைவு வாயில், பள்ளிக்கரணை பகுதிகளில் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கருணாசாகர் உத்தரவின் பேரில் பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கொடிசெல்வம், பரமசிவம், வெங்கடேசன், ஜெயவேல் உள்பட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா, வாகனங்களில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்து நடிகர் விவேக்கின் கார் வந்தது.
அந்த காரின் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. உடனே காரை போக்குவரத்து போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். கார் கண்ணாடியில் கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதால் அபராதம் விதிப்பதாக கூறினார்கள். அதற்கு, காரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற இருப்பதாக நடிகர் விவேக் கூறினார். ஆனால் தற்போது அனுமதி இல்லாததால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அபராத தொகையை நடிகர் விவேக் செலுத்தினார். இந்த சோதனையில் 100 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கார்களில் இருந்த கறுப்பு ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு
» போதையில் கார் ஓட்டிய சினிமா உதவி இயக்குனரை 15 நிமிடம் விரட்டிப் பிடித்த போலீசார்
» அப்பர் வேடத்தில் நடிப்பு: திருப்பத்தூர் சிவாஜி மன்றம் நடிகர் விவேக்குக்கு கண்டனம்
» ஐஸ் மீது நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்?
» பிரபல நடிகர் திலகன் கார் மோதி இரு குழந்தைகள் பலி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum