தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போதையில் கார் ஓட்டிய சினிமா உதவி இயக்குனரை 15 நிமிடம் விரட்டிப் பிடித்த போலீசார்

Go down

போதையில் கார் ஓட்டிய சினிமா உதவி இயக்குனரை 15 நிமிடம் விரட்டிப் பிடித்த போலீசார் Empty போதையில் கார் ஓட்டிய சினிமா உதவி இயக்குனரை 15 நிமிடம் விரட்டிப் பிடித்த போலீசார்

Post  ishwarya Sat Mar 16, 2013 3:46 pm


மும்பையில் உள்ள மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஜோகேஷ்வரி பகுதி நோக்கி விரைந்து வந்த ஒரு கார், போலீஸ் வேன் நின்றிருப்பதை பார்த்ததும் 'யூ டர்ன்' அடித்து வந்த வழியே திரும்பி மின்னல் வேகத்தில் பறந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனில் ஏறி அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அந்த காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அவர்கள், கட்டுப்பாட்டு அறையின் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் உஷார் படுத்தினார்கள்.

சினிமாவில் வரும் 'கார் சேஸ்' காட்சி போல் 15 நிமிடம் வரை நீடித்த இந்த துரத்தல், பெஷ்ராம் பாக் பகுதியில் முடிவுக்கு வந்தது. அந்த காரை மடக்கிப் பிடித்த போலீசார், நிற்க கூட நிதானமில்லாத நிலையில் இருந்த காரின் டிரைவரை விசாரித்தபோது அவரது பெயர் மார்க் சாமுவேல் என்பதும், சமீபத்தில் வெளியான 'டபாங் 2' இந்தி திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதம் தெரிய வந்தது. காரின் பின் இருக்கையில் இளம் பெண் ஒருவரும் போதையில் அமர்ந்திருந்தார்.

இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்த போது அவர்கள் போலீசாருடன் தகராறு செய்தனர். எனினும், போலீசார் அவர்களை குண்டுகட்டாக வேனில் தூக்கி போட்டு ஜோகேஷ்வரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மார்க் சாமுவேலிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் கூட இல்லாதது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை
»  குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்
»  குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்
» கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் நடிகர் விவேக்குக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
» கார் ரேஸ் – 7வது இடத்தைப் பிடித்த அஜீத்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum