விஸ்வரூபம் படம் இன்று வெளியானது: தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம்
Page 1 of 1

கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படம் கடந்த மாதம் 11-ந்தேதி வெளியாக இருந்தது. டி.டி.எச்.களில் ஒரு நாள் முன்னதாக 10-ந்தேதி ஒளி பரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பால் அப்போது படம் வெளியாகவில்லை. டி.டி.எச்.களில் படத்தை வெளியீடுவதை கண்டிக்கும் விதமாக தியேட்டர்களில் திரையிட அவர்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து கமலுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. 25-ந்தேதி தியேட்டர்களிலும் 2-ந்தேதி டி.டி.எச்.களில் வெளியிட உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பால் அப்போதும் வரவில்லை. அரசு படத்துக்கு தடை விதித்தது. தமிழகம், புதுவை தவிர பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படம் வெளியானது.
கமலுக்கும் முஸ்லிம் அமைப்பினருக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்தது. இதில் 7 சீன்களை நீக்க கமல் ஒப்புக் கொண்டார். இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தடையை அரசு விலக்கி கொண்டது. கோர்ட்டிலும் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. 27 நாள் போராட்டத்துக்கு பின் விஸ்வரூபம் படம் இன்று தமிழகம் முழுவதும் ரிலீசானது. தொடக்கத்தில் 524 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டனர்.
தற்போது அந்த எண்ணிக்கை உயர்ந்து 600 தியேட்டர்களில் வெளியானது. விஸ்வரூபம் ரிலீசை கமல் ரசிகர்கள் விழாக்கோலமாக கொண்டாடினார்கள். தியேட்டர்களில் கமல் கட் அவுட் பேனர்கள் வைத்து இருந்தனர். கொடி தோரணமும் கட்டி இருந்தார்கள். தியேட்டர்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. ரசிகர்கள் கொட்டும் பனியில் அதிகாலை 5 மணிக்கே திரண்டனர். அசோக்நகரில் உள்ள உதயம் தியேட்டரில் தென் சென்னை மாவட்ட கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் கே.ஏழுமலை தலைமையில் நூற்றுக் கணக்கான ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பும் வழங்கினார்கள்.
குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் காஞ்சி மாவட்ட கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் பி.கே.மணிவண்ணன் தலைமையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து விஸ்வரூபம் படம் பார்த்தனர். மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் தொடர்ச்சியாக பல காட்சிகள் திரையிடப்பட்டன. ஏராளமானோர் தியேட்டர்களுக்கு வந்து டிக்கெட் கிடைக்காமல் திரும்பி சென்றனர். ஒரு வாரத்துக்கு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» வட இந்தியா முழுவதும் 800 தியேட்டர்களில் விஸ்வரூபம் இன்று ரிலீசானது

» நாளை தியேட்டர்களில்,இன்று தெருக்களில்...! விஸ்வரூபம் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள கதி!
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum