கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் தமிழில் வெளியாகி வசூலை குவிக்கும் விஸ்வரூபம்: தினமும் படையெடுக்கும் ரசிகர்கள்
Page 1 of 1

விஸ்வரூபம் படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இப்படம் தமிழில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடி வசூலை குவிக்கிறது. சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம் சத்தியவேடில் உள்ள சீனிவாசா தியேட்டரில் விஸ்வரூபம் படம் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல ஆந்திர மாநிலம் முழுவதும் இப்படம் எந்தவித பிரச்சினையுமின்றி ஓடுகிறது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள தியேட்டர்களில் படம் பார்ப்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்தும் பாலக்காடு, சித்தூர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் கேரளா மாவட்டத்தினரும் சென்று விஸ்வரூபம் படம் பார்த்து வருகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் 54 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் தமிழில் வெளியாகியுள்ளது. பெங்களூரில் திரையிடப்பட்டள்ள இப்படத்தை கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகிறார்கள். கேரள மாநிலத்தில் 83 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் தமிழில் திரையிடப்பட்டு உள்ளது.
தமிழக-கேரள எல்லை பகுதியான குமுளியில் கிரேசி தியேட்டரில் 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. தேனி, கம்பம், உத்தம பாளையம், கூடலூர் பகுதியினரும் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கமல் ரசிகர்களும் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து கமல் ரசிகர்கள் கூறுகையில் தமிழகத்தில் விஸ்வரூபம் படம் பார்க்க ரூ. 200-க்கு டிக்கெட் எடுத்திருந்தோம். கோர்ட்டு தடையால் படம் பார்க்க முடியாமல் போனது. ஆனால் குமுளியில் 30 ரூபாயில் படம் பார்த்து விட்டோம் என்றனர். கேரளாவில் 30 சதவீதம் முஸ்லிம்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா
» ஒரு நாளைக்கு ரூ.35 லட்சம் வருமானம்: கேரளாவில் வசூலை குவிக்கும் தீபாவளி தமிழ் படங்கள்
» அஜித் வீட்டுக்கு படையெடுக்கும் ‘தல’ ரசிகர்கள்!
» கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் விஸ்வரூபம் ரிலீஸ்: 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டது
» வடமாநிலங்களில் 'விஸ்வரூபம்' 3 நாளில் ரூ.7 கோடி வசூல் சாதனை: 'ரோபோ' வசூலை முறியடித்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum