தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதத்தின் பெயரால் விபச்சாரிகள் ஆக்கப்பட்ட அப்பாவி பெண்கள்! விடிவு கிடைத்தது எப்படி..?

Go down

மதத்தின் பெயரால் விபச்சாரிகள் ஆக்கப்பட்ட அப்பாவி பெண்கள்! விடிவு கிடைத்தது எப்படி..? Empty மதத்தின் பெயரால் விபச்சாரிகள் ஆக்கப்பட்ட அப்பாவி பெண்கள்! விடிவு கிடைத்தது எப்படி..?

Post  meenu Sat Mar 16, 2013 5:12 pm



57


indian cultural prostitutesஒழுக்கம், கற்பு என்னும் கருத்துக்களில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற ஒரு தலைப்பட்ட நீதி வழக்கிலிருப்பதை வெளிப்படையாகக் காட்டும் நிறுவனமே தேவதாசி முறையாகும். இது ஆண்களின் வசதிக்காகவும், அவர்களின் இச்சையை அவர்கள் விருப்பப்படி பூர்த்தி செய்யவும், பெண்கள் சமூகத்தை மூளைச்சலவை செய்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடிய திட்டமாகும். பொட்டுக் கட்டுதல் என்ற பெயரில் பெண்களின் பலவீமான பொருளாதார நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட அநீதியாகும்.

இம்முறையின்படி சமூகத்தில் சில பெண்கள் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக தானம் செய்யப்பட்டனர். அவர்கள் தம் வாழ்க்கையில் விலை மகளிராகத் தொழில் புரிந்தனர். மதத்தின் பெயரால் அப்பெண்கள் பலியாடாக ஆக்கப்பட்டனர். ஆடல் பாடலுக் கென்றும், பூசைகள் செய்ய ஒத்தாசைக்கென்றும், கடவுளுக்குச் சேவை செய்ய என்றும் அப்பெண்கள் கோவில்களுக்குத் தானம் செய்யப் பட்டனர். குடும்பத்தில் இடர்பாடு வரும்போது அது நீங்குவதற்காகவும், குழந்தை பிறக்காத குடும்பத்தில் குழந்தை பிறந்தால் நேர்திக் கடன் என்றும், ஆண் வாரிசுகள் இல்லாத குடும்பங்களில் வருமானத்திற்காகவும், பிற பொருளாதார சிக்கல்களுக்காகவும் பெண்கள் அவ்வூர் கோவில் தெய்வங்கள் பெயரில் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டனர். இன்னும் சில குடும்பங் களில் முதல் குழந்தை பெண் என்றால் அது கோவிலுக்கே என்று, உயில்கள் முலமாக சாசனம் செய்திருந்தனர். அக்கோவிலின் கடவுளை மணந்து கொண்டு, பூசைக்காலங்கள், திருவிழாக்கள் முதலிய சமயங்களில் இறைவனை ஆடல் பாடல்களால் மகிழ்வித்து வாழ்க்கை நடத்தினர். நடை முறையில் அவர்கள் அக்கோவில் பூசாரிகள், அவ்வூர் தனவந்தர்கள், மற்றும் பலருக்கும் இன்பமளிக்கும் விலைமாதர்களாவே வாழ்க்கையை நடத்தினர். பெண்ணைப் பெற்றவர்களோ மறைமுகமாக அச்செல்வந்தர்களிடம் இருந்து பொன், பொருள் நிலபுலன்களைப் பெற்றுக் கொண்டனர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் இம்முறையின் கேடுகளை மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்சியை ஊட்டினார். பின்னர் அவர் 1929ல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சென்னை மாகாணத்தில் இவ்வழக்கத்தை ஒழித்துச் சட்டம் கொண்டு வர உறுதுணையாயிருந்தார்.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை காங்கிரஸில் இருந்த சனாதனவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். அதில் முக்கியமானவர் ‘தீரர்’ சத்தியமூர்த்தி ஐயர் . டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்தச் சட்டத்தைக் கொண்டு வர தீர்மானம் இயற்றியபோது, ஏதோ தீப்பட்டது போல் எதிர்த்த சத்தியமூர்த்தி ஐயர் , ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும், தேவதாசியாக இருப்பது தெய்வத் தொண்டு, அப்படி இருப்பவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் மோட்சம் கிடைக்கும்’ என்று ஆவேசப்பட்டார். அதற்கு முத்து லட்சுமி அவர்கள் ” இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டுமே ’ என்றார், வாயடைத்து போய் நின்றார் சத்தியமூர்த்தி!

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக இந்தச் சட்டம் 1929-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி அமல் படுத்தப்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» Facebook இல் அப்பாவி பொண்ணுங்களை, பொறுக்கி பயலுவ எப்படி கரெக்ட் பண்ணுறாய்ங்க..?
» சச்சினின் பேட் கிடைத்தது எப்படி: த்ரிஷா விளக்கம்
» ‘இலங்கையில் யாருக்கும் கிடைக்காத மரியாதை அசினுக்குக் கிடைத்தது எப்படி?’
» கடமை தவறியவருக்கு சொர்க்கம் கிடைத்தது எப்படி? – பாலம் திரு.கலியாணசுந்தரம் கூறும் சுவையான கதை!
» பெண்கள் எப்படி இருந்தா ஆம்பளைகளுக்குப் பிடிக்கும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum