விஸ்வரூபம் வழக்கு முடிவுக்கு வந்தது: சென்னை ஐகோர்ட் அறிவிப்பு
Page 1 of 1
விஸ்வரூபம் வழக்கு முடிவுக்கு வந்தது: சென்னை ஐகோர்ட் அறிவிப்பு
விஸ்வரூபம் படம் சம்பந்தமான அனைத்து வழக்குகளும் இன்று வாபஸ் பெறப்பட்டன. ஏற்கனவே விஸ்வரூபம் படத்துக்கான 144 தடை உத்தரவை நீக்க கோரி கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை எதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 144 தடை உத்தரவை நிறுத்தி வைத்தார். படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தார். இதனை எதிர்த்து அரசு சார்பில் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்து மீண்டும் தடை விதித்தனர். இதனால் படம் 25-ந்தேதி வெளியாகவில்லை.
இந்தநிலையில் முஸ்லிம் அமைப்பினரும், கமலஹாசனும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஆகி உள்ளனர். படத்தில் சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்து உள்ளார். அரசின் உள்துறை செயலாளர் ராஜகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. எழுத்துபூர்வமான உடன்பாட்டில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
இதைத்தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்கு எதிரான வழக்குகளையும் போராட்டங்களையும் வாபஸ் பெறுவோம் என்று முஸ்லிம் பிரதிநிதிகள் ஜவாஹிருல்லா, அனீபா ஆகியோர் தெரிவித்தனர். கமலும் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
ஐகோர்ட்டில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பிலும் முஸ்லிம் அமைப்புகள் சார்பிலும் தனி தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுபோல் அரசும் விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இவைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராஜேஸ்வரன் வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முடிவுக்கு வந்தது விஸ்வரூபம் சர்ச்சை
» முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
» தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது நடிகை அஞ்சலி போலீசில் ஆஜர் பரபரப்பு தகவல்கள்.
» ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடை நீக்கம்: பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஐகோர்ட் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum