இணையமூடாக நட்பை ஏற்படுத்தும் கவர்ச்சிப் பெண்கள்! அவதானம் தேவை! (வீடியோ)
Page 1 of 1
இணையமூடாக நட்பை ஏற்படுத்தும் கவர்ச்சிப் பெண்கள்! அவதானம் தேவை! (வீடியோ)
280
attraction girlஇணையத்தினால் நாம் பல நன்மைகளை அனுபவித்து வருகின்றமையை மறுக்கமுடியாது. ஆனால் அதே இணையத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் நாம் அறிவதில்லை.
இணையத்தினூடாக இடம்பெறும் பலவகையான மோசடிகள் தொடர்பில் ஊடகங்கள் அடிக்கடி எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான பெண்கள் மூலம் ஆண்களை வலையில் சிக்கவைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் சூட்சுமமான முறையில் இம்மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது நடைபெறும் விதம் சற்று சுவாரஸ்யமானது.
முதலில் இவர்கள் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான பெண்கள், ஆண்களுடன் நட்பை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவர்களுடன் பேசி நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துகின்றனர்.
பின்னர் அப் பெண்கள், ஆண்களை லைவ் வீடியோ செட்டிங்கிற்கு அழைத்து ஆபாசமாக நடந்துகொள்கின்றனர்.
articlemousestrap
இதன் மூலம் ஆண்களையும் தங்களது அந்தரங்க உறுப்புகளை காட்டுதல் போன்ற செயற்பாடுகளை செய்யத்தூண்டுகின்றனர்.
ஆண்கள் தங்களை மறந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில் அவர்கள் அறியாத வண்ணம் தொழிநுட்பத்தின் உதவியுடன் அவர்களை வீடியோ செய்கின்றனர்.
பின்னர் தாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவதாக எச்சரிக்கின்றனர்.
இவ்வாறு மிகவும் நூதனமான முறையில் பண மோசடியை மேற்கொள்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்படும் பலர் அவமானம் காரணமாக இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரிவிப்பதோ, முறைப்பாடுகளை மேற்கொள்வதோ இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் இத்தகைய மோசடிகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்த வருடத்தில் இதுபோன்ற மோசடிகள் தொடர்பில் 50 முறைப்பாடுகளும் 2011 ஆம் ஆண்டு 11 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மோசடிகளுக்கு பின்னாள் பெரிய கும்பல்கள் செயற்படுவதாகவும் எச்சரிக்கப்படுகின்றது.
பொதுவாக இணையம் மூலமான பாலியல் நடவடிக்கைகள் (Cybersex) என அழைக்கப்படுகின்றன. இவற்றினூடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் இருபாலாரும் சற்று அவதானமாக இருக்கவேண்டியது அவசியம் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனை விளக்கும் முகமாக தயாரிக்கப்பட்டுள்ள காணொளியொன்று இதோ
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் வாழ்க்கையில் விவாகரத்து ஏற்படுத்தும் பாதிப்பு
» பெண்கள் தங்க நகை அணியும் போது கவனம் தேவை
» விவாகரத்தை ஏற்படுத்தும் கிரகநிலைகள்
» சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!
» பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்டுக்கு இறக்குமதியாகும் இன்னொரு கவர்ச்சிப் புயல்!
» பெண்கள் தங்க நகை அணியும் போது கவனம் தேவை
» விவாகரத்தை ஏற்படுத்தும் கிரகநிலைகள்
» சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!
» பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்டுக்கு இறக்குமதியாகும் இன்னொரு கவர்ச்சிப் புயல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum